Friday, May 27, 2011

பெரியசாமி
சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணன் தான் எங்கள் குல தெய்வம்.மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது.சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் பெரியண்ணன்.திருச்சி,நாமக்கல்,துறையூர் என பல மாவட்டங்களில் பெரியண்ணன் கோவில்கள் இருந்தாலும்.இங்குள்ளதுதான் மூலம் என்கின்றனர்.மற்ற இடங்களின் சாமியின் உத்திரவுவாங்கி அடிமண் எடுத்து கோவில்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

சோழிய வெள்ளாளர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்திற்கும் பெரியண்ணன் குலதெய்வமாக விளங்குகிறார்.

கொல்லி மலை-

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை.கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது.பசுமையை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு அளவிடமுடியாத அளவிற்க்கு மகிமைகள் கொண்டுள்ளது.எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.இங்கே மின்சாரமே இல்லாத சில கிராமங்களில் கூட இருக்கின்றன என்னுஞ் செய்தி வியப்பை தருகின்றது.இதன் பெருமைகளை முன்பே நாம் கண்டுவிட்டோம்.

மாசி குன்று-

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் எட்டு நூற்றாண்டுகளுகும் முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.அது மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.அதன் வரலாற்றை கேட்டறிய சற்று சிரமமாக இருந்தது.எட்டு நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அக்கோவில் சிறப்பாக இருக்கின்றது,என்ற செய்தி கேட்டால் உச்சி சிலிர்க்கின்றது.அந்த வரலாற்று கதை இதுதான்.


காசியிலிருந்து பார்வதி தேவியும்,சிவனும் தென்திசை நோக்கி வந்தனர்.பார்வதி தேவி காமாட்சியாகவும்,சிவன் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர்.
(சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர்).துரையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார்.பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன்.அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது.இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர்.அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

வேண்டுதலுக்காக வேலில் கோழிகள்

மூலிகை குச்சிகள்

மூலிகை


மாசி பெரியசாமி கோவில்

அன்ன காமாட்சியம்மன் கோவில்

கல்லாத்துக் கோம்பு-

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதயாகும்.வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார்.காமாட்சியின் தெய்வதன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்ய வில்லை.கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற,பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை-

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம்.சிவனுக்கு கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல்.ஏதேனும் தீய எண்ணங்களை மனதில் வைத்து வருபவர்களை தன்னுடைய மாய சொருபங்களால் மயக்கி கொன்றுவிடுவாள் இந்த பாவை.பாவை என்றால் பெண் என்று பொருள். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.இதன் ஆலையம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது.தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

வேண்டுதல்கள்-

1. பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
3. உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
4. ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
7. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்-

மூலிகை மலை என்பதால் ஏகப்பட்ட மூலிகைகள் கிடைக்கின்றன.பல் வலிக்கு,மன நோய்க்கு என மூலிகைகளை தருவதோடு பயண்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர்.

ஆண்மைக்குறைவு, வெள்ளைப் படுதல் போன்றவைகளுக்கும் இங்கே மூலிகைகளை விற்கின்றார்கள்.

முக்கனிகளும் கிடைக்கின்றன.மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அசைவப்பிரியர்களுக்கு இங்கே கொண்டாட்டம் அதிகம்,இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

புதிர்-

சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர். பெரியண்ணனின் வழிபாட்டு முறைகள் சிவ வழிபாட்டை சார்ந்தே உள்ளது.சிவராத்திரி மகிமையாக கொண்டாடப் படுகின்றது.திருநீரு பிரசாதமாக தரப்படுகின்றது.நமது மரபுப் படி திருமணம் ஆன பெண் கணவனோடு மட்டும் தான் வெளியே வருவாள்.எனவே அவர்கள் சிவனும் பார்வதியும் என்றே அடித்துக் கூறுகின்றனர்.மேலும் சித்தர்கள் வாழ்வதாகவும்,பெரியண்ணனை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள்-

சிவம் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இல்லாமலா.இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சித்தர்களை பார்த்ததாக சொல்லும் சில கிராமத்துவாசிகள்.பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையு;ம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வது எப்படி-

நாமக்கலிருந்து அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும்.

அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும்.இந்த பாதையில் ஓடையொன்று உள்ளது.அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் வந்துவிடும் பெரியண்ணசாமி கோவில்.

இதைப் படிக்கும் அன்பர்கள் பெரியண்ணன்,காமாட்சி,கருப்புசாமியின் குல வாரிசாக இருந்தால் முடிந்த மட்டும் கொல்லிமலைக்கு சென்று சாமியை தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காமாட்சி, பெரியசாமி
கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.
கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.

3 comments:

  1. Anniyayam pannathinga boss... Masi periyannan anna kamatchiyin annan perumal. Avar shivanai thedi thaan kollimalaikku selkiraar, Mothala kollimalai poosarigalidamaavathu varalaatrai kettu eluthungal. Perum paavam vendam. Shivan arapalishvarar kovilil ullar.

    ReplyDelete
  2. Kollimalai Maasi kudril ulla Perumalukku arukil athavathu periyannaukku arugil iruppavar thaan Masi karuppu... pulikuththi pattan ivar thaan karuppu munikku moolavar.. Ivar Perumaal endra periyannavukku kaaval. Varalaaru kulami ullathu. THiruthi poosarigalidamm kettu eluthavum.

    ReplyDelete