கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
பொருளடக்கம்
* 1 பெயர்க் காரணம்
* 2 வரலாற்றுக் குறிப்புகள்
o 2.1 சங்ககாலத்தில் கொல்லிமலை
+ 2.1.1 கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்
# 2.1.1.1 பெருஞ்சேரல் இரும்பொறை
# 2.1.1.2 பொறையன்
# 2.1.1.3 சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
# 2.1.1.4 வானவன்
# 2.1.1.5 அதியமான்
# 2.1.1.6 ஓரி
+ 2.1.2 கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்
* 3 கொல்லிப்பாவை
* 4 சுற்றுலாத் தலங்கள்
o 4.1 ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி
o 4.2 கொல்லிப் பாவைக் கோவில்
o 4.3 அறப்பளீஸ்வரர் கோவில்
o 4.4 முருகன் கோவில்
+ 4.4.1 படகு சவாரி
+ 4.4.2 வியூ பாயிண்ட்
o 4.5 வல்வில் ஓரி பண்டிகை
* 5 போக்குவரத்து
* 6 இவற்றையும் பார்க்கவும்
பெயர்க் காரணம்
கொல்லி மலை & கீழுள்ள சமவெளி
உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.
கொல்லி மலையின் ஒரு பகுதி
வரலாற்றுக் குறிப்புகள்
பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.
இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
சங்ககாலத்தில் கொல்லிமலை
அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.
கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்
பெருஞ்சேரல் இரும்பொறை
பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொல்லிப்பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்
- பதிற்றுப்பத்து அரிசில் கிழார் 73,
பொறையன்
கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.
- இளங்கீரனார் – நற்றிணை 346
வேல்படை கொண்ட பசும்பூண் பொறையன் இதன் அரசன்
- ஔவையார் – அகம் 303
பொறையன் இதன் அரசன்
– நற்றிணை 185
சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சேரமான் யானைக்கட் சேய் தாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர் அடுபொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- குறுங்கோழியூர் கிழார் - புறம் 22
[தொகு] வானவன்
வெல்போர் வானவன் இதன் அரசன்
- தாயங்கண்ணனார் – அகம் 213
இவன் அதனைப் போரிட்டு வென்றான்
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
அதியமான்
கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்னும் ஊர்ப்பகுதியில் இவனை அதிகமானும் இருபெரு வேந்தரும் இணைந்து தாக்கியபோது பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்
– பதிற்றுப்பத்து 8ஆம் பத்து பதிகம்
ஓரி
‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’
- பெருஞ்சித்திரனார் – புறம் 158
வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.
- வன்பரனர் புறம் 152
வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்
- கபிலர் – குறுந்தொகை 100,
பரணர் - அகம் 208
புகழ்மிக்க ஓரியைக் கொன்று முள்ளூர் மன்னன் காரி கொல்லிமலை நாட்டைச் சேரலர்க்குக் கொடுத்தானாம்.
- கல்லாடனார் – அகம் 209
* கொல்லிப்பாவை பார்க்க.
* ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198
கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்
காந்தள் போல் கூந்தல் மணம்
கொல்லியில் பூக்கும் கார்மலர் (கார்த்திகை எனப்படும் காந்தள் பூ) போலத் தலைவியின் கூந்தல் மணந்ததாம்.
- பரணர் - அகம் 208
யானை
கொல்லிமலைப் பூக்களுக்கு இடையே பிடி(பெண்யானை) மறந்திருப்பது போல இளஞ்சேரல் இரும்பொறையின் பட்டத்தரசி மகளிர் ஆயத்தாரிடையே மறைந்திருந்தாளாம்.
- பெருங்குன்றூர் கிழார் – பதிற்றுப்பத்து 81
மூங்கில்
தலைவியின் தோள் கொல்லிமலை மூங்கில் போன்றதாம்
- தாயங்கண்ணனார் – அகம் 213,
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33
சூர்மகள்
சூர் மகள் விரும்பும் கொல்லிமலையின் உச்சியிலிருந்து கொட்டும் அருவியின் ஓசை போல அலர் ஊரில் பரவியது.
- ஔவையார் – அகம் 303
கொல்லிப்பாவை மடப்பத்தன்மை
கொல்லிப்பாவை போல் தலைவி மடப்பத்தன்மை உடையவளாக விளங்கினாளாம்
- கபிலர் – குறுந்தொகை 100\882,
‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம்.
- பரணர் – அகம் 22\1524,
கொல்லிப்பாவை
முதன்மைக் கட்டுரை: கொல்லிப்பாவை
முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் கதைகள் உள்ளன. அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர். கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி
கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
ஆகாயகங்கை அருவி
கொல்லிப் பாவைக் கோவில்
கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில்
சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
அறப்பளீஸ்வரர் கோவில்
12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
முருகன் கோவில்
அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.
படகு சவாரி
தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
வாசலூர்பட்டி படகுத் துறை
வியூ பாயிண்ட்
இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
வல்வில் ஓரி பண்டிகை
வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போக்குவரத்து
நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.
2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
* [1]
* [2]
* நாமக்கல் மாவட்ட சுற்றுலா தளம்
* கொல்லிமலையில் திணை அரிசி
பா • உ • தொ
நாமக்கல் மாவட்டம்
மாவட்ட தலைமையகம்
நாமக்கல்
மாநிலம்
தமிழ்நாடு
வட்டம்
நாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் •
நகராட்சி
நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்
ஊராட்சி ஒன்றியம்
நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை•மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • மோகனூர்
பேரூராட்சிகள்
போத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர்• இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்
என்னுடைய தெய்வமும் மாசி பெரியண்ணன் மற்றும் காமாட்சிதான்,.
ReplyDeleteதங்களுடைய தளம் கண்டதில் மகிழ்ச்சி.
நான் பெரியசாமியைப் பற்றி அறிய முற்பட்ட போது வலைதளங்களிலும், ஏடுகளிலும் நம் தெய்வம் பற்றிய குறிப்புகள் இல்லை. அங்கிருக்கும் பெரிய பூசாரியம் கேட்டு தகவல்களைப் பெற்று எழுதினேன்.
மேலும் பெரிய சாமியைப் பற்றி படிக்க ஏதுவாக விக்கியிலும் நான் தான் எழுதினேன். அதை தாங்கள் நகலெடுத்து பிரசுகம் செய்திருப்பது மகிழ்ச்சி.
சோழிய வெள்ளார்களும், கோவில் பங்காளிகளும் தொடர்பு கொள்ள மேலும் தெரிந்து கொள்ள நம் பெருமை உணர,..
முகநூலில் தொடர்பு கொள்ள,..
https://www.facebook.com/groups/105949976113403/
வலைதளம்,..
http://chozhiavellalar.blogspot.in/
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
http://sagotharan.wordpress.com/