Friday, May 27, 2011

மகிமைமிக்க சிவராத்திரி

சிவன் என்றாலே அன்பு.அதனால் பெரியோர்கள் அன்பே சிவம் என்கின்றனர்.சிவனுடைய கதைகளை தேடிப் பயணப்பட்ட போது,அவரின் அடியார்கள் பலரின் கதைகள் தான் கிடைத்தன.அதில் சிவனின் அடியவர்களின் ஏகப்பட்ட திருவிளையாடல்கள் நிரம்பியுள்ளது.சித்தர்கள்,சிவனடியார்கள்,நாயன்மார்கள் என எல்லோரின் கதைகளிலும் அன்பே மேலோங்கி கானப்படுகின்றது.அந்த சிவனுக்கு உகந்த நாளான சிவராத்திரியின் மகிமைகளை கதைகளாக வெளியிட தீர்மானித்துள்ளேன்.அதற்கு ஒரு முன்னோட்டமாக சிவராத்திரியைப் பற்றியும்,அன்று செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும் இப்பொழுது குறிப்பிடுகின்றேன்.
சிவராத்திரி வகை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை,தேய்பிறை நாட்களின் போது வரும் சதுர்த்தசி நாட்களில் வருவது நித்திய சிவராத்திரி.
தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பக்ஷ சிவராத்திரி.
திங்கட்கிழமைகளில்(சோமவாரம்) பகல்,இரவு ஆகிய இரு பொழுதுகளிலும் அமாவசை இருந்தால் அது யோக சிவராத்திரி.
ஆண்டுதோறும் மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவதுதானஅ மகா சிவராத்திரி.
சிவம்-சுபம்
சிவராத்திரியன்று தேவாரம்,திருமுறைகள்,சிவபுராணம் ஆகியவற்றை படிப்பது நலம்.ருத்ரம்,சமகம் போன்றவற்ரை ஜபித்தாலோ அல்லது வீட்டில் டேப்ரிக்கார்டரில் போட்டுக் கேட்பதாலோ மன அமைதியோடு வீட்டிலும் அமைதி நிலவும்.
பில்வாஷ்டகம்,லிங்காஷ்டகம்,வேத பாராயணம்,சிவனடியார்களின் வரலாறு,தேவாரம்,பெரியபுராணம்,சித்தர்களின் கதைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை படிப்பதாலோ,இல்லை கேட்பதாலோ எண்ணற்ற பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.
இதைச் செய்ய இயலாதவர்கள் சிவநாமத்தை உச்சரித்து கோவிலுக்கு சென்று ஒரு கால பூஜையை தரிசிக்கலாம்.ஏழை.எழியவர்களுக்கு தங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்கிறது பெரியபுராணம்.அதிலும் ஒருவருடைய பசியை போக்குபவனுக்கு பரமனின் அருள் கிடைப்பதாகவும் கூறுகிறு.
சிவம் என்றால் சுபம்.சங்கரன் என்றால் சுபத்தை உண்டாக்குபவன்.சிவனுக்குப் பிரியம் அளிக்கும் மங்கள ராத்திரிதான் சிவராத்திரி.
சிவராத்திரி அபிஷேக ஆராதனை
முதல் ஜாமத்தில்-
பஞ்சகவ்ய அவிஷேகம்,சந்தனம்,வில்வம்,தாமரைப்பூ அலங்காரம்,அர்ச்சனை. பச்சைப் பயறு பொங்கல் நிவேதனம்.ருக்வேத பாராயணம்.
இரண்டாம் ஜாமத்தில்-
சர்க்கரை,பால்,தயிர்,நெய், கலந்த ரஸபஞ்சாமிர்தம் அபிஷேகம்,பச்சைக் கற்பூரம் பன்னீர் சேர்த்து அரைத்து சார்த்துதல்,துளசி அலங்காரம்,தாமரைப்பூ அர்ச்சனை,நிவேதனமாக பாயசம்,யஜுர்வேத பாராயணம்.
மூன்றாம் ஜாமத்தில்-
தேன் அபிசேகம்,பச்சைக் கற்பூரம் சார்த்துதல்,மல்லிகைப்பூ அலங்காரம், வில்வ அர்ச்சனை,எள் சாதம் நிவேதனம்,சாமவேத பாராயணம்.
நான்காம் ஜாமத்தில்-
கருப் பஞ்சாறு அபிசேகம்,நந்தியாவட்டைமலர்,அல்லி,நீலோற்பவ மலர் அலங்காரம் அர்ச்சனை, நிவேதனமாக சுத்தமான அன்னம்,அதர்வண வேத பாராயணம்.

ருத்ராட்சம்
சிவபிரானின் கண்ணீர் துளியிலிருந்து பிறந்து ருத்ராட்சம்.ருத்ரன் என்றால் சிவன்,அஷம் என்றால் கண்.இதை அணிவதால் ரத்த அழுத்தம் சம நிலை பெறும்.
அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ருத்ராட்ச மாலையை தலைக்கு மேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரால் குளித்தால் குறையும்.பெரிய ருத்திராட்சத்தை தண்ணீரில் நனைத்து சந்தனம் போல் நன்கு அரைத்து உள்ளுக்கும் சாப்பிட்டு,மேலேயும் பூசினால் இதய வலி குணமடையலாம்.
தினமும் ருத்ராட்சத்தை குளிர்ந்த நீரில் ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் உடல் சூடு தணியும்.ஜலதோசம் குணமாகும்.
இவைகள் செவிவழி செய்தியாகவும்,புத்தகங்களில் இருந்தும் தரப்பட்டவை.எனினும் சிவப் பிரியர்கள் திருத்தம் சொன்னால் உடனே அவை திருத்தப்படும்.v

1 comment:

  1. என்னுடைய தெய்வமும் மாசி பெரியண்ணன் மற்றும் காமாட்சிதான்,.

    தங்களுடைய தளம் கண்டதில் மகிழ்ச்சி.

    நான் பெரியசாமியைப் பற்றி அறிய முற்பட்ட போது வலைதளங்களிலும், ஏடுகளிலும் நம் தெய்வம் பற்றிய குறிப்புகள் இல்லை. அங்கிருக்கும் பெரிய பூசாரியம் கேட்டு தகவல்களைப் பெற்று எழுதினேன்.

    மேலும் பெரிய சாமியைப் பற்றி படிக்க ஏதுவாக விக்கியிலும் நான் தான் எழுதினேன். அதை தாங்கள் நகலெடுத்து பிரசுகம் செய்திருப்பது மகிழ்ச்சி. என்னுடைய தளத்திற்கான இணைப்பினை கொடுத்து விடுங்கள். இது வரை சட்டப்படியான நடவெடிக்கைகள் எதுவும் எடுக்கும் எண்ணமில்லை. ஆனால் நாளைய பொழுதுகளில் பிளாகர் சட்டபடி இந்த தவறுக்காக தண்டனை கிடைக்கலாம். எனது தளம் என்றில்லை. எந்த தளத்திலும் இதே நடைமுறைதான். கவணமாக இருங்கள்.

    சோழிய வெள்ளார்களும், கோவில் பங்காளிகளும் தொடர்பு கொள்ள மேலும் தெரிந்து கொள்ள நம் பெருமை உணர,..

    முகநூலில் தொடர்பு கொள்ள,..
    https://www.facebook.com/groups/105949976113403/

    வலைதளம்,..
    http://chozhiavellalar.blogspot.in/

    அன்புடன்,
    சகோதரன் ஜெகதீஸ்வரன்.

    http://sagotharan.wordpress.com/

    ReplyDelete