Monday, May 30, 2011

கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர்.


அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...

முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.

ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.

அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.

01-09-09
Print | E-mail : Email this Article



சுகந்தன்

அடர்ந்த காடுகளுடன் மூலிகைகள் நிறைந்து விளங்கும் கொல்லிமலையில் கோவில் கொண்டு அருள்புரியும் ஈசன்- அறப்பள்ளீஸ் வரர். இவர் சுயம்புவாகத் தோன்றியவர். அதன் சுருக்கமான வரலாறு...

முன்னொரு சமயம் கொல்லி மலையில் அறப்பள்ளியன் என்பவன் வாழ்ந்து வந்தான். சிறந்த சிவ பக்தன். மூலிகைகளைக் கண்டறியும் திறன் பெற்ற அவன், அங்கு மூலிகைகளைத் தேடி வரும் மருத்துவர்களுக்கு வழிகாட்டி யாகவும் இருந்தான். அப்படி வரும் மருத்துவர் கள் அவனுக்கு ஏதேனும் பொருள் கொடுப்பார் கள். அதனைக் கொண்டு அவன் வாழ்ந்து வந்தான்.

ஒரு மழைக் காலத்தின்போது, குடிசையில் அவன் வைத்திருந்த தேனும் தினைமாவும் தீர்ந்து விட்டன. வெளியில் சென்று உணவு தேட முடியாத நிலையில் பசியால் வாடிய அவன் இறைவனை வேண்டினான். அந்த வேளையில் அழுக்கு ஆடை அணிந்த ஒரு முதியவர் அவன் குடிசைக்கு வந்தார். மழையில் நனைந்து கொண்டி ருந்த அவரை உள்ளே அழைத்தான் அறப்பள்ளியன். உள்ளே வந்த முதியவர், ""கவலைப்படாதே! நானிருக்கும்போது உனக்கென்ன கவலை?'' என்றார்.

அவரை அதிசயத்துடன் பார்த்தான் அறப்பள்ளியன்.

""என்ன அப்படிப் பார்க்கிறாய்? இந்த மலைப்பகுதியில் வசிப்பவர் களையெல்லாம் எனக்குத் தெரியும். மழைக்காலத்தில் உனக்கு எதுவும் கிடைக்காது. அதனால் நீ இந்தப் பகுதியை சீர்திருத்து. அப்பொழுது நீ எதிர்பாராத செல்வம் கிடைக்கும். ஆடி மாதம் பிறந்ததும் நான் சொன்னது போல் செய்'' என்றார் அவர்.

""தங்கம் கிடைக்குமா சாமி?'' என்றான் அறப்பள்ளியன்.

""அதைவிட உயர்ந்தது கிடைக்கும்'' என்று கூறிய அந்த முதியவர் தான் கொண்டு வந்திருந்த தினைமாவையும் தேனையும் அவனிடம் கொடுத்து விட்டு, ""வந்த வேலை முடிந்தது'' என்று சொல்லி, அவனை வாழ்த்தி விட்டு வெளியேறினார்.

அவர் சென்ற வழியைப் பார்த்தான் அறப்பள்ளியன். அவர் ஓரிடத்தில் நின்று அவனைத் திரும்பிப் பார்த்து கைகளைத் தூக்கி வாழ்த்தினார். அப்படியே மறைந்து போனார். வந்து போனவர் யாரோ ஒரு சித்தர் என்பதை உணர்ந்து மெய்சிலிர்த்தான் அவன். பின்னர் அவன் குடிசைக்கு முன் இருந்த இடங்களை சீர் செய்யத் தொடங்கி னான். பெரிய கற்களை அகற்றி சமன்படுத்தி னான். ஒருநாள், அவன் கடினமான ஒரு பாறையை அப்புறப்படுத்தும்போது ஓர் ஒளி தோன்றியது. ஒளி தோன்றிய இடத்தில் உள்ள கற்களைக் கைகளால் அப்புறப் படுத்தும்போது ஒரு சிவலிங்கம் தானாக வெளிவந்தது! சிவலிங்கம் தோன்றிய நாள் ஆடி மாதம், பதினேழாம் நாள்! அப்போது மிகக் கடுமையாக மழை பெய்ய ஆரம்பித்தது. இடி மின்னலுடன் காற்றும் வீசியது. அதனால் அவன் குடிசைக்குத் திரும்பி விட்டான்.

மறுநாள் அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அன்று வந்த முதியவர் மீண்டும் அங்கு வந்தார்.

அவர் கால்களில் விழுந்து வணங்கியவன், நடந்ததைச் சொன்னான்.

""நீ மட்டும் மழையில் நனையாமலிருக்க குடிசையில் இருக்கிறாய். உன் தெய்வம் மட்டும் மழையில் நனையலாமா?'' என்று சித்தர் கேட்டதும், அவன் சிவலிங்கத்தைப் பார்த்தான். அங்கு சிவலிங்கத்தைச் சூழ்ந் திருந்த நீரில் சில மீன்கள் லிங்கத்தைச் சுற்றி வலமாக வருவதைப் பார்த்தான். உடனே தன் குடிசையின் ஒரு பகுதியைப் பிரித்து அங்கு பந்தல் போட்டான். அந்த சித்தர் பெருமான் மீன்கள் சுற்றி வந்த அந்த இடத்தில் கிழக்கு நோக்கி அந்தச் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த நாள் ஆடி பதினெட்டு. சிவ பூஜை செய்யும் வழிமுறைகளை அவனுக்குச் சொல் லிக் கொடுத்து விட்டுச் சென்றார் அந்தச் சித்தர்.

அறப்பள்ளியன் முதன் முதலில் அந்தச் சிவலிங்கத் தைக் கண்டதால் அந்தச் சிவலிங்கம் "அறப்பள்ளீஸ் வரர்' என்று பெயர் பெற்றது.

இதன் காரணமாகவே இப்பொழுதும் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் பதினேழு, பதினெட்டு, பத்தொன்பதாம் தேதி களில் சிவன் தோன்றிய நாளாகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சித்ரா பௌர்ணமி அன்று இத்திருக்கோவில் வளாகத்தில் பக்தர்கள் தனிப்பட்ட முறையில் யாகங்கள் செய்கிறார்கள். இத்திருக்கோவிலில் தினமும் முதல் மரியாதையாக இக்கோவிலின் வடக்குப் பகுதியில் உள்ள ஸ்ரீசரப தீர்த்தத்தில் (ஆறு) வாழும் மீன்களுக்கே பூஜை செய்யப் படுகிறது. இதற்கும் ஒரு வரலாறு உண்டு.

பல வருடங்களுக்குமுன் இந்தக் கோவிலில் உள்ள பொருட்களைக் கொள்ளையடிக்க சிலர் வந்தார்களாம். அவர்கள் ஆற்றில் இறங்கி கோவிலை நோக்கி வரும்போது பெரிய பெரிய மீன்கள் துள்ளிக் குதிப்பதைக் கண்டனர். இந்த கொழுத்த மீன்களைப் பிடித்து சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும் என்று மீன்களைப் பிடித்து அறுத்து, அங்கேயே ஒரு குச்சியில் அந்த மீன்களைச் செருகி, தீ மூட்டி வாட்டியிருக்கிறார்கள். சாப்பிடுவதற்குப் பதமானதும், அப்பகுதியிலிருந்த தாமரை இலைபோல் இருந்த பெரிய இலையைப் பறித்து, அதில் தீயில் வாட்டிய மீன்களை எடுத்து வைத்திருக்கி றார்கள். அப்பொழுது தீயில் சுடப்பட்ட மீன்கள் முழு வடிவம் பெற்றுத் துள்ளிக் குதித்து ஆற்றில் விழுந்து மறைந்தனவாம். இதனைக் கண்ட அந்தத் திருடர்கள் அங்கிருந்து பயந்து ஓடி விட்டார்களாம். அதன் காரண மாகவே இங்கு மீன்களுக்குப் பூஜை செய்யப்படுகிறதாம்.

குழந்தைச் செல்வம் இல்லாதவர்களும் திரு மணத் தடை உள்ளவர் களும் மற்றும் பல துன் பங்கள் நீங்கவும் இங்கு வந்து வேண்டிக் கொண் டவர்கள், தங்கள் குறை தீர்ந்ததும் இந்த ஆற்றில் உள்ள மீன்களுக்கு மூக் குக் குத்தி சிறிய அணி கலன் அணிவித்து ஆற் றில் விடும் நிகழ்ச்சி இங்கு நடைபெறுகிறது.

ஆற்றங்கரை அருகி லுள்ள இத்திருக்கோவிலைச் சுற்றி பெரிய மதில் சுவர். கிழக்கு பார்த்த (ராஜகோபுரம் இல்லாத) நுழைவாயில். கோவிலுக்குள் சென்றதும் கொடி மரம், பலி பீடம். அதனைத் தொடர்ந்து நந்தியெம்பெருமான் சிவ பெருமானைப் பார்த்த வண்ணம் உள்ளார். இந்த நந்திக்கு மூன்று கால்கள் மட்டுமே உண்டு. பின்புற வலக்கால் இல்லை. இது பற்றியும் புராணக் கதை உண்டு.

இக்கோவிலிலிருந்து சுமார் பத்து மைல் தூரத்தில் புளியஞ்சோலை என்ற ஊர் உள்ளது. அங்கே விவசாயப் பெருங்குடி மக்கள் நிலக்கடலை பயிரிட்டிருக்கிறார்கள். அவ்வாறு பூக்கள் பூத்ததும், அதன் மணம் சுற்றுப்புறங் களில் மணக்கும். அவ்வாறு பூக்கள் பூத்தால் நிலத்தடியில் கடலை நல்ல முற்றிய நிலையில் உள்ளது என்பர். கடலைப் பூக்களின் மணம் நந்தியின் மனதைக் கவர்ந்தது. அதனால் நந்தி இரவு வேளையில் உயிர்பெற்று எழுந்து புளியஞ்சோலைக்குச் சென்று, கடலை வயலில் தன் கொம்புகளால் குத்திக் கிளறி கடலைக் காய்களை கொத்து கொத்தாகச் சுவைத்துவிட்டு விடிவதற்குள் கோவிலுக்கு வந்துவிடுமாம். இதுபோல் தொடர்ந்து நடக்கவே, விவசாயி கள் அந்தப் பகுதியை ஆட்சி புரிந்த குறு நில மன்னரிடம் கூறினர். அவர் இரண்டு வீரர்களை அந்தப் பகுதிக்கு அனுப்பி கண்காணிக் கச் சொன்னார். நள்ளிரவில் அங்கே வந்த நந்தியைக் கண்ட வீரர்கள் அதனை விரட்ட முயல, அது அந்த வீரர்களை முட்டுவதற்கு முயன்றது.

ஒரு வீரன் நீண்ட இரும்பு ஆயுதத்தால் நந்தியின் வலது பின்னங்காலை வெட்டி னான். கால் வெட்டப்பட்ட நந்தி கோவி லுக்கு ஓடிவந்து விட்டது. காலை இழந்த நந்தி இறைவனிடம் முறையிட, ""ஒருவர் வயலில் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்தது தவறு. நீ திருடித் தின்ற கடலைக்குத் தண்டனைதான் இது. இப்படியே இரு'' என்று சொன்னாராம் இறைவன்.

விவரம் அறிந்த விவசாயிகள் தங்கள் செயலுக்கு வருந்தியதுடன், தினமும் நந்திக்குப் பிடித்த கடலைக்காய்களை அதற்குச் சமர்ப்பித்தார்கள்.

நந்தியெம்பெருமானைத் தரிசித்து விட்டு உள்ளே மகா மண்டபத்திற்குள் நுழையும்போது வாசல் பகுதியின் இரு பக்கங்களிலும் துவார பாலகர்கள்போல் சித்தர்கள் இருவர் காட்சி தருகிறார்கள்.

மகா மண்டபத்தையடுத்து அர்த்த மண்டபம். அதைத் தொடர்ந்து கிழக்கு நோக்கிய கருவறை. சந்நிதியில் ஸ்ரீஅறப் பள்ளீஸ்வரர் அருள்புரிகிறார்.

ஒரு அடி அகலத்தில் மூன்றடி உயரத்தில் காட்சி தருகிறார். இவரை ஸ்ரீ தர்மகோசீஸ் வரர் என்றும் அழைப்பர். கருவறையின் வலப்புறம் விநாயகர் எழுந்தருளியுள்ளார். மூலவரைத் தரிசித்தபின் மகா மண்டபம் வந்தால் தெற்கு நோக்கிய தனிச் சந்நிதியில் அம்மன் "தாயம்மை' நின்ற கோலத்தில் அருள்புரிகிறாள். அம்மனை ஸ்ரீதர்ம கோசீஸ்வரி என்றும் அழைப்பர். இந்த அம்பாள் காமாட்சியின் திருவுருவமாகப் போற்றப்படுகிறாள். லட்சுமி, சரஸ்வதி ஆகியோரும் இவளுக்குள் அடக்கம். எனவே இவளை வணங்கினால் முப்பெருந்தேவியரை ஒருசேர தரிசித்த பலன் கிட்டும்.

அம்பாள் எதிரே வாகனம் எதுவும் இல்லை. அம்பாளை வழிபட்டு சிறிது பின் நோக்கினால் மேலே விதானத்தில் அஷ்ட லட்சுமி சக்கரம் உள்ளது. ஸ்ரீசக்கரத்தைத் தரிசித்தபின் மகா மண்டபத்தின் தெற்கு வாசல் வழியாக வெளியே வந்தால் வள்ளி- தெய்வானையுடன் ஆறுமுகனார் மயில்மீது அமர்ந்து தனிச் சந்நிதியில் வடக்கு நோக்கி அருள்புரிகிறார். இவரது பார்வை அம்பாளை நோக்கி உள்ளது தனிச் சிறப் பாகும். கன்னி மூலையில் ஸ்ரீஔஷத கணபதி எனப்படும் வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.

மேற்கு கோஷ்டத்தில் மகா விஷ்ணு எழுந்தருளி யுள்ளார். மகா விஷ்ணுவை நோக்கி மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இச்சந் நிதிக்கு அடுத்து வீணை யுடன் சரஸ்வதி எழுந்தருளி யுள்ளாள். இந்த சரஸ் வதிக்கு ஸ்ரீவித்யா சரஸ் வதி என்று பெயர்.

இக்கோவிலின் வடக்குப் பகுதியில் ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தக் கரை உள்ளது. கொல்லிமலை களில் தோன்றும் ஐந்து அருவிகள் ஒன்று சேர்ந்த புனித நீர் இதுவென்று சொல்லப்படுகிறது. ஸ்ரீசரபேஸ்வர தீர்த்தம் என்னும் இந்த ஆறு கரடுமுரடான கற்கள் உள்ள பகுதியில் ஓடி வந்து இங்கு சிறிய நீர்வீழ்ச்சிபோல் விழுகிறது.

இத்தீர்த்தக் கரைக்குக் கோவிலிலிருந்து சுமார் நூறு படிகள் கீழே இறங்கிச் செல்ல வேண்டும். தீர்த்தக்கரையின் வலப்புறத்தில் தனி மண்டபத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.

இத்தீர்த்தத்தில் பல அரிய மூலிகைகள் கலந்திருப்பதால் இதில் நீராடினால் உடல் நலம் வளம் பெறும், சரும நோய்கள் நீங்கும், அனைத் துத் தோஷங்களும் விலகும் என்பர். இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் ஆகாசகங்கை என்னும் தீர்த்தம் (நீர்வீழ்ச்சி) உள்ளது. கரடுமுரடான பாதையில் சென்று 1,200 படிகள் மேல்நோக்கிச் செல்ல வேண்டும்!

இந்தக் கொல்லிமலைப் பகுதியில் சித்தர்கள் பலர் வாசம் செய்வதாலும், அரிய மூலிகைச் செடிகள் இங்கு உள்ளதாலும் அதன் மணம் நம்மை ஒருநிலைப்படுத்தும் உணர்வை நாம் அறியலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சித்தர்கள் இந்த மலையில் உள்ள அருவிகளில் நீராடுவார்களாம். அப்பொழுது, அவர்கள் மக்கள் உடல்நலம் வளம் பெற சில அரிய மூலிகைகளைப் பறித்து அரைத்து மந்திரங்கள் ஜபித்து, இந்த அருவி நீரில் கலப்ப தாக நம்பப்படுகிறது. அதனால், இந்த ஸ்ரீசர பேஸ்வர தீர்த்தத்தில் (ஆற்றில்) பௌர்ணமிக்கு அடுத்த நாள் நீராடுவது சிறப்பிக்கப்படுகிறது. இங்கு அருள்புரியும் ஈஸ்வரன் சக்தி வாய்ந்த ஞான மூர்த்தி. இவர் மூலிகை வாசம் கொண்டவராதலால் இவருக்குக் காட்டப்படும் தீபாராதனைத் தீபத்தில்கூட மூலிகை வாசத்தை உணரலாம்.

இக்கோவிலில் அமாவாசையன்று அன்னதானம் செய்தால் பித்ரு தோஷம் விலகும்; அவர் களின் ஆசி கிட்டும். இத்தல ஈசனையும் அன்னையையும் வணங் கினால் சுகமான வாழ் வும் எதிர்பாரா செல்வ மும் கிட்டும்!

நாமக்கல்லிலிருந் தும் சேலத்திலிருந்தும் கொல்லிமலைக்குப் பேருந்துகள் இயக்கப் படுகின்றன.

Links

திருமூலர் திருமந்திரம்,மற்றும் வரலாறு
அருள்மிகு மாசி பெரியண்ணசுவாமி திருக்கோயில்

Friday, May 27, 2011

பெரியசாமி
சங்கிலி கருப்பு,முனி,பெரியசாமி,பெரியண்ணன் என பல பெயர்களில் இருக்கும் மாசி பெரியண்ணன் தான் எங்கள் குல தெய்வம்.மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது.சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது கம்பீரமாக அமர்ந்திருக்கிறார் பெரியண்ணன்.திருச்சி,நாமக்கல்,துறையூர் என பல மாவட்டங்களில் பெரியண்ணன் கோவில்கள் இருந்தாலும்.இங்குள்ளதுதான் மூலம் என்கின்றனர்.மற்ற இடங்களின் சாமியின் உத்திரவுவாங்கி அடிமண் எடுத்து கோவில்கள் எழுப்பப் பட்டிருக்கின்றன.

சோழிய வெள்ளாளர் சமூகத்திற்கும், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்திற்கும் பெரியண்ணன் குலதெய்வமாக விளங்குகிறார்.

கொல்லி மலை-

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை.கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது.பசுமையை தன்னுள் தக்க வைத்துக்கொண்டு அளவிடமுடியாத அளவிற்க்கு மகிமைகள் கொண்டுள்ளது.எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.இங்கே மின்சாரமே இல்லாத சில கிராமங்களில் கூட இருக்கின்றன என்னுஞ் செய்தி வியப்பை தருகின்றது.இதன் பெருமைகளை முன்பே நாம் கண்டுவிட்டோம்.

மாசி குன்று-

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் எட்டு நூற்றாண்டுகளுகும் முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர்.அது மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.அதன் வரலாற்றை கேட்டறிய சற்று சிரமமாக இருந்தது.எட்டு நூற்றாண்டுகளை கடந்து இன்றும் அக்கோவில் சிறப்பாக இருக்கின்றது,என்ற செய்தி கேட்டால் உச்சி சிலிர்க்கின்றது.அந்த வரலாற்று கதை இதுதான்.


காசியிலிருந்து பார்வதி தேவியும்,சிவனும் தென்திசை நோக்கி வந்தனர்.பார்வதி தேவி காமாட்சியாகவும்,சிவன் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர்.
(சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர்).துரையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார்.பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது.அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன்.அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது.இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார்.

மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர்.அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.

வேண்டுதலுக்காக வேலில் கோழிகள்

மூலிகை குச்சிகள்

மூலிகை


மாசி பெரியசாமி கோவில்

அன்ன காமாட்சியம்மன் கோவில்

கல்லாத்துக் கோம்பு-

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதயாகும்.வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார்.காமாட்சியின் தெய்வதன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்ய வில்லை.கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற,பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.

கொல்லிப் பாவை-

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம்.சிவனுக்கு கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல்.ஏதேனும் தீய எண்ணங்களை மனதில் வைத்து வருபவர்களை தன்னுடைய மாய சொருபங்களால் மயக்கி கொன்றுவிடுவாள் இந்த பாவை.பாவை என்றால் பெண் என்று பொருள். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள்.இதன் ஆலையம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது.தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

வேண்டுதல்கள்-

1. பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
2. தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
3. உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
4. ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
5. படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
6. கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
7. மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்-

மூலிகை மலை என்பதால் ஏகப்பட்ட மூலிகைகள் கிடைக்கின்றன.பல் வலிக்கு,மன நோய்க்கு என மூலிகைகளை தருவதோடு பயண்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர்.

ஆண்மைக்குறைவு, வெள்ளைப் படுதல் போன்றவைகளுக்கும் இங்கே மூலிகைகளை விற்கின்றார்கள்.

முக்கனிகளும் கிடைக்கின்றன.மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
அசைவப்பிரியர்களுக்கு இங்கே கொண்டாட்டம் அதிகம்,இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.

புதிர்-

சிலர் பெரியண்ணனை சிவனின் வழிதொன்றலாகவே கருதுகின்றார்கள்.அவரே தம் மனைவி பார்வதி தேவியுன் காசியிலிருந்து கொல்லி மலைக்கு வந்தார் என்றும் கூறுகின்றனர். பெரியண்ணனின் வழிபாட்டு முறைகள் சிவ வழிபாட்டை சார்ந்தே உள்ளது.சிவராத்திரி மகிமையாக கொண்டாடப் படுகின்றது.திருநீரு பிரசாதமாக தரப்படுகின்றது.நமது மரபுப் படி திருமணம் ஆன பெண் கணவனோடு மட்டும் தான் வெளியே வருவாள்.எனவே அவர்கள் சிவனும் பார்வதியும் என்றே அடித்துக் கூறுகின்றனர்.மேலும் சித்தர்கள் வாழ்வதாகவும்,பெரியண்ணனை வழிபடுவதாகவும் கூறுகின்றனர்.

சித்தர்கள்-

சிவம் இருக்கும் இடத்தில் சித்தர்கள் இல்லாமலா.இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சித்தர்களை பார்த்ததாக சொல்லும் சில கிராமத்துவாசிகள்.பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையு;ம் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செல்வது எப்படி-

நாமக்கலிருந்து அறப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும்.

அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும்.இந்த பாதையில் ஓடையொன்று உள்ளது.அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் வந்துவிடும் பெரியண்ணசாமி கோவில்.

இதைப் படிக்கும் அன்பர்கள் பெரியண்ணன்,காமாட்சி,கருப்புசாமியின் குல வாரிசாக இருந்தால் முடிந்த மட்டும் கொல்லிமலைக்கு சென்று சாமியை தரிசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காமாட்சி, பெரியசாமி
கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.
கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.

மாசி பெரியண்ண சுவாமி - வைரசெட்டிபாளையம்









மாசி பெரியண்ண சுவாமி - வைரசெட்டிபாளையம்



பயணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆன்மீகச் சுற்றுலாவாக குடும்பத்துடன் செல்லும் போது, கோவில்களின் வரலாறுகளையும், சிற்பக் கலையும் வெகுவாக ரசிப்போம்.

பிச்சாயி கதை நடந்த இடம் துறையூரி்ல் இருக்கும் பெருமாள் மலையின் அடிவாரம் என்று வலைப்பூவில் படித்திருந்ததை சொன்னேன். சரி முதலில் அங்கு செல்லாம் என்று சொன்னார்கள். அடுத்த சிலமணி நேரங்களில் பிச்சாயி,வீரய்யா கோவிலில் இருந்தோம்.

பிச்சாயி கதையும், கோவில் அமைப்பு பற்றியும் தனித்தனி இடுகையில் சொல்கிறேன். முக்கியமாக சொல்லப்பட வேண்டியது அழகு நிறைந்த அந்த குதிரைகள். அடுத்ததாக பெருமாள் மலையில் பெருமாளின் தரிசனம். தென் திருப்பதி என அழைக்கப்படுகிறதாம் பெருமாள் மலை. பிரகாரச் சிற்பங்கள் அழகாக இருந்தன. அதைவிடவும் சொல்லப்பட வேண்டியது. அங்கே இருந்த கருப்புசாமி சந்நதியைதான். பெருமால் கோவிலில் விபூதி பிரசாதத்துடன் ஒரு அடி குதிரையில் ஒய்யாரமாக இருக்கிறார். எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

வியப்பு தீருவதற்குள் வைரசெட்டி பாளையத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் இருந்தோம். அங்கே இருக்கும் மாசி பெரியண்ணன்தான் எங்கள் குலதெய்வம். சிலர் அவரை சிவன் ரூபம் என்கின்றார்கள். சிலர் பெருமாள் என்கின்றார்கள். சைவ வைணவ பிரட்சனையில் எங்கள் சாமியின் தலையில் நாமமும், பட்டையும் மாறி மாறி விழுந்து கொண்டிருப்பது ஒரு பெரும்கதை.

பட்டை அடித்துக் கொண்டு பெரியசாமி

நாமம் போட்டுக் கொண்டு பெரியசாமி
“ஐயா, பெரியசாமி உன்னை எல்லா இடங்களுக்கும் கொண்டுப் போக அருள் செய்.

அருகிலிருக்கும் கல்லாத்துக் கோம்பைக்கு சென்றோம். அது பெரியசாமிக்கென தனியாக கோவில் இருக்கும் இடம். அங்கு பெரியசாமிக்கு சைவ வைணவ பிரட்சனையோடு சாதிப் பிரட்சனையும் உண்டு. ஒருபுறம் பழைய கோவில், அங்கு பூசாரி சோழிய வெள்ளாளர். இன்னொரு புறம் புதிய கோவில் அங்கு முத்தரையர் பூசாரி. ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மறுகோவிலுக்கு செல்வதில்லை. கடவுளுக்கே இந்த நிலையா என்று நொந்து கொண்டேன்.

நாமக்கல் அருகிலிருக்கும் எட்டுகை அம்மன் கோவிலுக்கு செல்லாம் என்றேன். எட்டுகை அம்மனை கொல்லிமலையில் தரிசித்திருக்கிறேன். ஆனால் கீரம்பூரில் அத்தனை பெரிய கோவிலில் குடிகொண்டிருப்பாள் என கனவிலும் நினைக்கவில்லை. ஏக்கர் கணக்கில் தங்கள் குலதெய்வத்திற்கு கோவிலை அமைத்திருக்கின்றார்கள் கொங்கு வெள்ளாளர் சமூகத்தினர்.

குலதெய்வங்களுக்காக அமைக்கப்பட்ட பெரிய கோவில் இதுவாகத்தான் இருக்குமென நினைத்தேன். செம்பூதத்தான் பண்ணை குலமக்கள் கோவிலில் ஓர் அறிவிப்பு பலகையை வைத்திருந்தார்கள். தங்களுடைய குழந்தைகளின் கல்விக்கு உதவும் நோக்கத்தில் அவர்களின் செயல்பாடு பிரம்மிக்க வைத்தது. என்னுடைய அப்பா அதனை பாராட்டிக் கொண்டே இருந்தார். இதனைப் பற்றியும் தனி இடுகையில்.


ஊருக்கு செல்லும் வழியில் வலையப்பட்டிக்கு சென்றோம். அங்குள்ள குன்னிமரத்தான் கோவிலுடன் எங்களுடைய முதல்நாள் பயணம் முடிவடைந்தது.

சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம்v

சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வம்

மாசி பெரியண்ணன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிக்குன்றில் அமைந்துள்ளார். சங்கிலிகருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடிஉயரமுள்ள வேங்கைஎன்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன்அமர்ந்திருக்கிறார். கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாகவிளங்குகிறது.


வரலாறு

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார்.

கல்லாத்துக் கோம்பு


இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்குசென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.
கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
திருநாவுக்கரசு சுவாமிகள்

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.


வேண்டுதல்கள்

* பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டிபெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
* தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில்குத்துகின்றனர்.
* உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
* ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
* படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
* கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும்செய்கிறார்கள்.
* மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில்கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

செல்லும் வழி


நாமக்கலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில்சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும். அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்லவேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும்வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.

சோழிய வெளாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்தது பிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டியவேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடிவேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத்தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழிபெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் எனஅழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்துதங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசைவேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம்பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர்குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக்கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்துபிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத்தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழியவேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம்அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனதுகாவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்துவரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள்மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாதுஅவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாதசாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்துவர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள்இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன்முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாததனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகலஅறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்துவைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழியவேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்குமணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன்நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்துகௌரவித்தாராம்.

“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளானசேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்துகுமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர்தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்றுஅறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்றுஅழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம்மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப்பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூகவழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”


சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின்மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கிலஅகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும் அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆன ஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப்பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும்போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச்சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத்தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழதேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப்பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில்தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர்காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.


'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிதுவேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர்அங்கமாக உள்ளது.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப்பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ளகி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச்சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில்இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில் உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும் கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில் ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர்சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது.

சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும் சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும் முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச்சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச்சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளைஉய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில்சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம்திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச்சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில்பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

கொல்லி மலையின் சிறப்புகளை

கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.



கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.

கொல்லி மலையின் சிறப்பு

கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.கொல்லிமலையின் ஒரு பகுதிமூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம். ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள் கொல்லி மலை-மாசிக் குன்றுகொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.1.பெரியசாமி கோவில்.2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.4.எட்டுக்கை அம்மன்.5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.10.வள்ளல் ஓரியின் சிலை.

சித்தமெல்லாம் சிவமயம்v

சித்தர்கள்
சித்தமெல்லாம் சிவமயம் – 2
சித்தர்களின் மர்மங்களை வெளியிடும் தொடரின் வெற்றிகரமான இரண்டாவது கட்டூரை இது.

கருத்துரை மூலம் வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்களுக்கும், மெயில் மூலம் சித்தர்களின் புத்தங்கள் பற்றியும், வலைப்பூக்கள் பற்றியும் தெரிவித்த நண்பர்களுக்கும் மிக்க நன்றி. உங்களால் என்னுடைய தேடல் துரிதமாகியுள்ளது.தொடர்ந்து படியுங்கள் நண்பர்களே...

சித்தர்களின் சித்துவிளையாட்டுகள் –

சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். இந்த சித்திகளில் எட்டு பெரும் சித்திகள் உள்ளன. இதை அட்டமா சித்திகள் என கூறுகின்றார்கள். அவைகளை அறிந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்கள் சித்தர்கள்.

1. அணிமா – அணுவைக் காட்டிலும் சிறியதாக வடிவெடுத்தல்.

2. மகிமா – மலையை விட பெரிய வடிவெடுத்தல்.

3. கரிமா – மெல்லிய வடிவாக இருத்தலும், கைகளால் தூக்க இயலாத அளவிற்கு கனமாக இருத்தலும், நுகர்ச்சியின் தொடக்குகள் பற்றாமல் இருப்பதுவுமான ஆற்றல்.

4. இலகிமா – காற்றை விட மெல்லிய வடிவெடுதல்.


5. பிராப்தி – நினைத்த பொருளை, நினைத்த நேரத்திலே பெரும் ஆற்றல்.

6. பிராகாமியம் – பல பல வடிவங்களை எடுத்தலுக்கும், அளவுக்கதிகமான வலிமை அல்லது ஆற்றல் உள்ளமைக்கும் இப்படி பெயர்.

7. ஈசாத்துவம் – தேவர்கள் முதல் சிறு உயிர்கள் வரை தன்னை வணங்கி வழிபடும் நிலை.


8. வசித்துவம் – தன்னை கண்டவர் அனைவரையும் தன் வயப்படுத்துவதும், கோள்களையும், மீன்களையும் தன் வசம் செய்வதுமான ஆற்றல். வசியம் என அனைவராலும் அறியப்பட்டுள்ளது.

இதைவிட சிறந்த பல்வேறான சித்திகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் கூடுவிட்டு கூடுபாயும் நிலை. சித்தர்கள் இந்த அட்டமா சித்திகளில் வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். அதற்கு ஆதாரங்களும் இருக்கின்றன. அந்த ஆதாரங்கள் சித்தர்களின் தனிப்பட்ட வாழ்கைகளைகளை விவரிக்கும் போது உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

சித்தர்களின் மதம் –

எல்லா மதங்களிலும் ஞானிகள் இருக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தில் அவர்களுக்கு சூப்பிக்கள் என்று பெயர், பௌத மதத்தில் அவர்களுக்கு ஜென் ஞானிகள் என்று பெயர். நம் மதத்தில் சித்தர்கள். ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அது என்னவென்றால் ஞானிகள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள், சித்தர்கள் ஞானத்தில் சிறந்தவர்களாகவும், சித்திகளில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். மற்ற மதங்களில் இறை தூதர்களுக்கு மட்டுமே சித்திகள் தெரிந்திருக்கின்றன.


சித்தர்கள் நம் இந்துமத்த்தினை சார்ந்தவர்கள். அதற்காக தற்போது கோவில்களில் வேதமந்திரங்கள் சொல்லி சிலைகளுக்கு அபிசேகம் செய்யும் பிராமணர்கள் போல எண்ணிவிடாதீர்கள். இவர்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் சீவனே சிவம் என உணர்ந்து, அதையே மக்களுக்கு போதித்தவர்கள். இதனால் சித்தர்களை ஏற்காத பல மதவாதிகளும் உண்டு.

இயற்கையான இயல்புகளை உடைத்தெறியக் கூடியவர்களாக மட்டுமல்லது மனதினை மட்டுமே கடவுளாக போற்றுகின்ற சித்தர்களும் உண்டு. ஆன்மீகத்தில் தன்னையே கடவுளென போதிக்கும் வகையிலும் சிலர் வருகின்றார்கள். மனதினை அடக்கி ஆளும் வகையிலே யோகிகளாகவும், பல துறைகளில் சிறந்து விளங்கும் ஞானிகளாகவும் இருந்திருக்கின்றனர். இப்படி பல்வேறுபட்ட கருத்துகளை சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக நான்கு வழிகள்.

1. சாலோகம் – இறைவனோடு ஒரே இடத்தில் இருக்கும் நிலை.

2. சாமீபம் – இறைவனை நெருங்கியிருக்கும் நிலை.

3. சாரூபம் – இறைவனை உருப்பெற்று விளங்கும் பேறு.

4. சாயுச்சியம் – இறைவனுடன் இரண்டறக் கலத்தல் நிலை.ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஐக்கியமாகும் நிலை.

அகத்தியர் லிங்க வழிபாட்டினை விரும்பியவராக இருந்துள்ளார். பாம்பாட்டி சித்தர், அகப்பேய் சித்தர் போன்றோர் மனதினையை கடவுளாக நினைத்துள்ளனர். இப்படி பலவகையான கொள்கைகள் உடையவர்களாக சித்தர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் சொன்னது மனதினை வென்று உயரிய வழிக்கு செல்லும் முறை மட்டுமே.

சித்தர்களினால் ஏற்பட்ட பலன் –

சித்தர்களின் அறிவு திறத்தால் ரசவாதம், நாடிசோதிடம், பட்சி சாத்திரம், சித்த வைத்தியம், யோகா, தியானம் போன்ற பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இவர்களைப் பற்றி ஆய்வு செய்தவர்கள் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் போல சிலவற்றை அமைத்து சித்தர்கள் தங்களது துறையில் வல்லுனர்கள் ஆனார்கள் என்கின்றனர். அது மட்டுமல்லாது உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர். முழுக்க முழுக்க காட்டிலும் குகையிலும் ஆராட்சி செய்ததால் மக்களுக்கு தெரியாத பல அரிய மூலிகைகளையும், முறைகளையும் சித்தர்கள் அறிந்து வைத்திருந்தனர்.

ஆயகலைகள் அறுபத்தி நான்கு -

சித்தர்கள் ஆயகலைகள் அறுபத்தி நான்கில் (சிலவற்றை தவிர) சிறந்து விளங்கியிருக்கின்றனர். அறுபத்தி நான்கிலும் சிறந்து விளங்கியதாக கூட கருத்துகள் நிலவுகின்றன. இக்கூற்று எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.ஆனால் ஒவ்வொறு சித்தரும் ஒரு கலையிலாவது சிறந்து விளங்கியிருக்கின்றனர். போகர் என்னும் சித்தர் சிற்பங்களை வடிப்பதில் வல்லவராக திகந்திருக்கிறார், பாம்பாட்டி சித்தர் விஷமுறிவு மருத்துவதுறையிலும், அகத்தியர் முதலானோர் எழுத்தாற்றல் கலையிலும் சிறந்து விளங்கி உள்ளதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன.

சரி அறுபத்தினான்கு கலைகள் என்னென்ன? என்று தெரிந்தால் தானே நாம் ஒரு முடிவுக்கு வர இயலும். அதற்காக இங்கே பட்டியல். இந்த பட்டியலும் காலத்திற்கு ஏற்றாற் போல மாறுபட்டுள்ளது.

முதல் பட்டியல் -
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).


வேறொரு பட்டியல்

1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22. கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).

போர் பயிற்சிகள், யானையேற்றம்,குதிரையேற்றம் போன்ற மன்னர்கள் செய்யக்கூடிய கலைகளில் சித்தர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது சந்தேகமே. சில சித்தர்கள் மன்ன்னாக இருந்து பின் சித்தர்களாக மாறியவர்கள் என்பதனை நாம் மறக்க கூடாது. ஆனால் அழற்கட்டு (அக்கினித் தம்பனம்), நீர்க்கட்டு (சலத்தம்பனம்), வளிக்கட்டு (வாயுத்தம்பனம்), கண்கட்டு (திருட்டித்தம்பனம்), நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்), விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்),புதையற்கட்டு (கனனத்தம்பனம்),வாட்கட்டு (கட்கத்தம்பனம்),சூனியம் போன்றவற்றில் தேர்ந்திருப்பதற்கான வழிகள் உண்டு. சித்தர்களைப் பற்றிய செவிவழிச் செய்திகள் இதை உறுதி படுத்துகின்றன.

எந்தெந்த சித்தர்கள் எவற்றில் வல்லவர்கள் என்பதினை அவர்களுடைய தனிப்பட்ட வரலாறு இடுகைகளில் இடுகின்றேன். கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள்.

மர்மங்கள் தொடரும்...
எழுதியது ஜெகதீஸ்வரன். நேரம் 3:39 am
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Google Buzz க்கு பகிர்க
லேபிள்கள்: ஆன்மீகம், சித்தமெல்லாம் சிவமயம், சித்தர்கள், சைவம்
சித்தமெல்லாம் சிவமயம் - 1
சித்தர்களின் பாடல்களை படித்து இன்புற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்து சித்து விளையாட்டில் உலகத்தையே நல்வழிப்படுத்திய மகாபுருசர்களின் வரலாறுகளையும், அவர்களின் மர்மங்களையும், வாழ்க்கையையும் அறிந்திட தயாராகுங்கள்.

சித்தர்கள் –

தியானம்,மருத்துவம்,ஆன்மீகம்,தத்துவம்,விஞ்ஞானம்,ரசாயனம்,சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என எதுவையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.

சாதாரண மக்களாலும், சமய விற்பனையாளர்களாலும் சொல்லப்பட்ட புனைவுக்கதைகளை நான் இங்கு சொல்லப்போவதில்லை. சித்தர்களைப் பற்றி ஆய்வு நடத்தும் சித்தரியல் நூல்களையும், விங்கிபீடியா, அக்னி சிறகு போன்ற சிறந்த வலைப்பூக்களையும், சித்தர்களைப் பற்றி அறிந்தவர்களின் வார்த்தைகளை கேட்டும் இங்கு எழுதுகிறேன்.

சிவனை வணங்குவதால் மட்டும் எனக்கும் சித்தர்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொஞ்சம் காலமும் தேவைப்பட்டது. நான் படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொண்டவைகளை ஒரு குட்டி தொடராகவே எழுதுவது என தீர்மானித்தேன்.அந்த தொடரின் முதல் பகுதியாக சித்தர் பாடல்கள் வெளிவந்தன. இப்போது அந்த சித்தர்களின் மகிமைகளைப் பற்றியும் எழுதுகிறேன். இந்த தொடர் வெற்றிகரமாக அமைய உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

புதிதாக தெரிந்த செய்தி –

பொதுவாக எல்லோறும் கூறுவது போல சித்தர்கள் வெறும் 18 பேர்கள் இல்லை.கொஞ்ச நாள் முன்பு வரை எனக்கும் இந்த செய்தி தெரியாது. சித்தர்களின் பெயர்களை பல்வேறு புத்தகங்கள் வெவ்வேறு விதமாக அச்சிட்டு இருக்கின்றன. பொதுவாக இவைகள் புனைப்பெயர்களாக இருக்கும் என நான் நம்பினேன். ஆனால் சித்தர்கள் நூற்றுக்கும் மேர்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்த போது வியப்பு ஏற்பட்டது. அந்த வியப்புடனே சித்தர்களைப் பற்றிய ஓர் சின்ன பார்வை.

பதினென் சித்தர்கள் அல்லது பதினெட்டு சித்தர்கள் என பிரித்தவர்கள் யார் என தெரியவில்லை. இந்த தொகுப்பு முறை காரணமாக இரண்டு வேறுபட்ட பட்டியல் காணப்படுகின்றது. இது மட்டும் அல்ல இன்னும் பிற தொகுப்புகளும் காணப்படலாம்.ஏன் இந்த மாறுபட்ட பட்டியல்கள் என நீங்கள் கேட்டால் அதற்கு ஒரே விளக்கம் தான் என்னிடம் இருக்கிறது. வள்ளல்களை எப்படி ஏழு ஏழாக பிரித்தனரோ, அதைப்போல ஒரு பாகுபாடுதான் சித்தர்களை பிரித்தமைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்.

ஒரு 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. திருமூலர்
2. இராமதேவர்
3. கும்பமுனி
4. இடைக்காடர்
5. தன்வந்திரி
6. வால்மீகி
7. கமலமுனி
8. போக நாதர்
9. மச்ச முனி
10. கொய்கணர்
11. பதஞ்சலி
12. நந்தி தேவர்
13. போதகுரு
14. பாம்பாட்டி
15. சட்டைமுனி
16. சுந்தரானந்த தேவர்
17. குதம்பைச் சித்தர்
18. கோரக்கர்

அடுத்த 18 சித்தர்களின் பெயர் பட்டியல் –

1. கௌதமர்
2. அகத்தியர்
3. சங்கரர்
4. வைரவர்
5. மார்க்கண்டர்,
6. வன்மிகர்,
7. உரோமர்
8. புசண்டர்
9. சட்டைமுனி
10. நந்தீசர்
11. திருமூலர்
12. பாலாங்கிநாதர்
13. மச்சமுனி
14. புலத்தியர்
15. கருவூரார்
16. கொங்கணர்
17. போகர்
18. புலிப்பாணி

வேறுபாடுகள் அற்றவர்கள் –

இனம், மதம், மொழி, நாடு என்ற நம்முடைய பிரிவினைகளுக்கெல்லாம் கட்டுப்படாதவர்கள் சித்தர்கள். காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆண்டவர்களுக்கு சமூகத்தின் பிரிவுகள் பாதிக்கவே இல்லை. பல நாடுகளில் பயணம் செய்து, பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுளார்கள். உதாரணமாக ராமதேவராகிய யாக்கோபு என்ற சித்தர் இஸ்லாமிய மதத்தின் புனித இடமான மெக்காவில் தங்கி தான் கற்றவற்றை, இங்கு வந்து தமிழிலும் எழுதியுள்ளார்.

அந்தந்த நாடுகளுக்கு தக்கபடி பெயர்கள் இருப்பதால் சில சித்தர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களும் இருக்கின்றன.அதுமட்டுமல்லாமல் பல மொழித் திறமையால் பல நாடுகளில் அவர்களின் புத்தகங்கள் இருக்கின்றன. சித்தரியல் என்னும் ஒரு இயலே இதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சித்தர்களின் நூல்களை ஆராந்து பார்த்து பல நாடுகளிலும் நவீன மருத்துவத்தில் அதனை சேர்க்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் கண்டுபிடிப்பான மனநிலையை ஒழுங்கு செய்யும் யோகா, இன்று மிகப்பெரிய அளவில் மக்களை சென்றடைந்துள்ளது. ஜக்கிவாசுதேவ், பரமஹம்ஸ நித்தியானந்தர் , வேதாந்திர மகரிசி போன்றவர்கள் தங்களது வாழ்க்கையை மக்கள் நல்வாழ்வுக்காக தந்து யோக நிலைகளை கற்று தருகிறார்கள். அத்துடன் நல்ல தமிழில் சித்தர்களைப் போல புத்தகங்களும் எழுதுகிறார்கள். ஒரு மதம் என்று இவர்கள் கட்டுக்குள் அடங்குவதில்லை, மதம்,இனம் கடந்து தங்கள் சேவையை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னைப் பொருத்தவரை இவர்களும் சித்தர்களே.

108 சித்தர்களின் பெயர்கள் -

நான் முன்பு கூறியபடியே நூற்றுக்கும் மேற்பட்ட சித்தர்கள் இந்த உலகில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பு 108 சித்த மாமுனிகளின் பெயர்களை படித்து பாருங்கள். உங்களுக்கு தெரிந்த பழக்கமான பல சித்தர்கள் இருப்பார்கள்.

1. திருமூலர்.
2. போகர்.
3. கருவூர்சித்தர்.
4. புலிப்பாணி.
5. கொங்கணர்.
6. மச்சமுனி.
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்.
8. சட்டைமுனி சித்தர்.
9. அகத்தியர்.
10. தேரையர்.
11. கோரக்கர்.
12. பாம்பாட்டி சித்தர்.
13. சிவவாக்கியர்.
14. உரோமரிசி.
15. காகபுசுண்டர்.
16. இடைக்காட்டுச் சித்தர்.
17. குதம்ப்பைச் சித்தர்.
18. பதஞ்சலி சித்தர்.
19. புலத்தியர்.
20. திருமூலம் நோக்க சித்தர்.
21. அழகண்ண சித்தர்.
22. நாரதர்.
23. இராமதேவ சித்தர்.
24. மார்க்கண்டேயர்.
25. புண்ணாக்கீசர்.
26. காசிபர்.
27. வரதர்.
28. கன்னிச் சித்தர்.
29. தன்வந்தரி.
30. நந்தி சித்தர்
31. காடுவெளி சித்தர்.
32. விசுவாமித்திரர்
33. கௌதமர்
34. கமல முனி
35. சந்திரானந்தர்
36. சுந்தரர்.
37. காளங்கி நாதர்
38. வான்மீகி
39. அகப்பேய் சித்தர்
40. பட்டினத்தார்
41. வள்ளலார்
42. சென்னிமலை சித்தர்
43. சதாசிவப் பிரம்மேந்திரர்
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார்
45. ராகவேந்திரர்
46. ரமண மகரிஷி.
47. குமரகுருபரர்
48. நடன கோபால நாயகி சுவாமிகள்
49. ஞானானந்த சுவாமிகள்
50. ஷீரடி சாயிபாபா
51. சேக்கிழார் பெருமான்
52. ராமானுஜர்
53. பரமஹம்ச யோகானந்தர்
54. யுக்தேஸ்வரர்
55. ஜட்ஜ் சுவாமிகள்
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார்.
58. சிவப்பிரகாச அடிகள்.
59. குரு பாபா ராம்தேவ்
60. ராணி சென்னம்மாள்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி
62. குழந்தையானந்த சுவாமிகள்.
63. முத்து வடுகநாதர்.
64. இராமதேவர்
65. அருணகிரிநாதர்.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள்
67. மௌன சாமி சித்தர்
68. சிறுதொண்டை நாயனார்.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள்.
70. வல்லநாட்டு மகாசித்தர்.
71. சுப்பிரமணிய சித்தர்.
72. சிவஞான பாலசித்தர்.
73. கம்பர்.
74. நாகலிங்க சுவாமிகள்.
75. அழகர் சுவாமிகள்.
76. சிவஞான பாலைய சுவாமிகள்
77. சித்தானந்த சுவாமிகள்.
78. சக்திவேல் பரமானந்த குரு
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
80. அக்கா சுவாமிகள்
81. மகான் படே சுவாமிகள்
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
83. பகவந்த சுவாமிகள்.
84. கதிர்வேல் சுவாமிகள்.
85. சாந்த நந்த சுவாமிகள்
86. தயானந்த சுவாமிகள்
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள்.
89. வேதாந்த சுவாமிகள்
90. லஷ்மண சுவாமிகள்.
91. மண்ணுருட்டி சுவாமிகள்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள்.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்).
94. கோட்டூர் சுவாமிகள்.
95. தகப்பன் மகன் சமாதி
96. நாராயண சாமி அய்யா சமாதி
97. போதேந்திர சுவாமிகள்
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்.
99. வன்மீக நாதர்.
100. தம்பிக்கலையான் சித்தர்
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள்
102. குகை நாச்சியார் மகான்.
103. வாலைகுருசாமி.
104. பாம்பன் சுவாமிகள்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள்.
106. பெரியாழ்வார் சுவாமிகள்
107. மாயம்மா
108. பரமாச்சாரியார்.

ராணி சென்னம்மாள், மாயம்மா என்ற பெயர்கள் பெண் சித்தர்களை குறிக்கின்றன. அதனால் பெண் சித்தர்களும் உலகில் மகிமை புரிந்திருக்கின்றனர்.

இந்தப்பட்டியல் தொகுக்கப்பட்ட ஒன்று என்பதால் நீங்கள் படித்திருந்த, கேள்விபட்டிருந்த சில சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டு போயிருக்கலாம், அப்படி ஏதேனும் சித்தர்களின் பெயர்கள் விடுப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு சித்தர்களைப் பற்றி செய்திகள் தெரிந்தாலோ கருத்துரையில் தெரிவிக்கவும். என்னுடைய பணியில் நண்பர்கள் நீங்களும் பங்கெடுத்து கொள்ள மிகவும் தாழ்மையுடன் அழைக்கிறேன்.சித்தர்கள் பற்றிய செய்திகள், வலைப்பூக்கள் என தங்களுக்கு தெரிந்ததை அடியேனுக்கு அருள jagadees1808@gmai.com மெயில் அனுப்புங்கள்.

மர்மங்கள் தொடரும்...
எழுதியது ஜெகதீஸ்வரன். நேரம் 4:35 am
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Google Buzz க்கு பகிர்க
லேபிள்கள்: ஆன்மீகம், சித்தமெல்லாம் சிவமயம், சித்தர்கள், சைவம்
சித்தமெல்லாம் சிவமயம்
சித்தமெல்லாம் சிவமயம்

சித்தர்கள் பற்றி நான் அறிந்த செய்திகள் மிகவும் வியக்கத்தக்கதாய் இருந்தது.எப்போதும் ஈசன் நாமம் சொல்லித் திரியும் வெறும் முனிவர்களாய் மட்டுமே நினைத்திருந்தேன்.ஆனால் அவர்களின் மகிமைகள் உலகிற்கு தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.அவர்கள் மனிதனாக பிறந்தாலும் மனம் சொன்னபடி பித்தனாக திரிந்தவர்கள்.அந்த மனதினை ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள்.அழியாத உடல் பெற்றவர்கள்.கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள்.எதையும் தங்கமாக்கும் சொர்ண ரகசியம் அறிந்திருந்தனர்.முக்காலத்தையும் உணர்ந்தவர்கள்.காற்று,நீர்,நெருப்பு என எங்கும் உலவுவார்கள்.இத்தனை மகிமைமிக்கவர்கள் நம்முடன் வாழ்ந்தார்கள் என நினைக்கும் போதே பெருமையாக இருக்கின்றது.

இனி இந்த மர்மயோகிகளின் மாய உலகுக்குள் செல்ல தயாராகுங்கள்.முதலில் நாம் அறிந்து கொள்ளப் போவது இந்த பதினெட்டு மகாபுருசர்களின் நாமங்கள்.

1. திருமூலர்
2. தேரையார்
3. கருவூரார்
4. இடைக்காடர்
5. பாம்பாட்டி சித்தர்
6. சிவவாக்கியர்
7. உரோம ரிஷி
8. சட்டை முனி
9. அகப்பேய் சித்தர்
10. போகர்
11. கோரக்கர்
12. குதம்பைச் சித்தர்
13. காகபுசுண்டர்
14. கொங்கணர்
15. பட்டினத்தார்
16. திருமாளிகைத் தேவர்
17. ராமதேவர் என்கிற யாகோபு
18. நாராயணப் பிராந்தர்

பெயர்களை தெரிந்து கொண்டீர்களா,இவர்களின் சில பெயர்களை கேட்கும் போது எங்கோ கேள்விப் பட்டதினைப் போல இருக்கும்.உண்மைதான்.இதில் வெகு சிலர் நமக்கு நன்கு பழக்கமானவர்கள்.எப்படி என்கிறீர்களா.எல்லாம் தமிழ் செய்த மாயம்.ஆம் இவர்கள் தங்களின் தமிழ் எழுத்துகள் மூலம் நம்மிடையே அறிமுகம் ஆனவர்கள்.திருமூலர் எழுதியது தான் ஒப்பற்ற திருமந்திரம் என்னும் நூல்.இது போல மக்களின் நலன் கருதி அனைத்து சித்தர் பெருமகன்களும் நூல்களை எழுதியுள்ளனர்.இவர்களின் வரலாறுகளை தொடர்ந்து அந்த பாடல்களையும் இந்த இணையதளத்தில் நீங்கள் பெறலாம்.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என வாழ்ந்த சித்தர்களின் புகழைப் பற்றி எழுதுவதற்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.தொடர்ந்து சித்தர்களின் பெருமை மிக்க பாடல்கள் வெளிவரும்.
எழுதியது ஜெகதீஸ்வரன். நேரம் 1:44 am
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Google Buzz க்கு பகிர்க
லேபிள்கள்: சித்தர் பாடல்கள், சித்தர்களின் பெயர்கள், சித்தர்கள்
கொல்லி மலை
கொல்லி மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் மலைகளின் சிறப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.மலைத் தலம் என்பதே மிக மிக வினோதமான அமைப்பைக் கொண்டது.தரைகளில் இருக்கும் தலங்களுக்கும் மலையில் இருக்கும் தலங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.பொதுவாக மலைகள் என்பதே மிகவும் சக்தி வாய்ந்தது.

சூரிய கதிர்களும்,சந்திர கதிர்களும் மற்ற கிரங்கங்களின் கதிர்களும் மலைப் பிரதேசங்களில் அதிகமாக பரவுகின்றன.சூரிய கதிர்களை மட்டுமே நம்மால் உணர முடிவதால் தான்,மலைப் பிரதேசங்களின் குளுமையை அனுபவிக்கின்றோம்.இது எளிதான ஒரு உதாரணம்.நம்மால் உணரவே முடியாத பல விஷயங்கள் மலைகளில் புதைந்து கிடக்கின்றன.மனதினை அடக்க எளிதாக அது கட்டுப்படுகின்ற சூழல் அங்கு நிலவுகின்றது.அதற்கு காரணம் கதிர்வீச்சுகள் தான்.தரைப் பகுதியில் மனதினை அடக்குவது மிகக் கடினம்.இதை புரிந்து கொண்ட பெரும் மாகான்கள் மலைகளிலேயே தங்கி விடுகின்றனர்.சித்தர்கள் மலைகளில் உலவுவதற்கு இதுவும் ஒரு காரணம்.

மலைகளில் உள்ள தட்பவெப்பம் மிகவும் இன்றியமையாதது.வடக்கு பகுதியில் இருக்கும் மலைகளைப் போல் மிக உயரமானது இல்லை நம்முடைய கொல்லிமலை.அதிக வெப்பமும்,அதிகமான குளிரும் இல்லாமல் அங்கு உள்ள அருமையான தட்பவெப்பம் மூலிகைச் செடிகள் வளருவதற்கு காரணமாக இருக்கின்றன.பல வகையான செடிகள் நம்மால் இன்று அடையாலம் காணப்பட்டாலும் சில செடிகளை பயண்படுத்துவதுப் பற்றி சித்தர்களுக்குத் தான் தெரியும்.



கொல்லிமலையின் ஒரு பகுதி


மூலிகைச் செடிகள் என்றவுடன் ஏதோ நமக்கு தெரியாத ஒன்றென எண்ணிவிட வேண்டாம்.நம்முடைய உணவுகளில் இருக்கும் மிளகு,கிராம்பு,சோம்பு போன்றவைகளும் மூலிகைகள் தான்.சித்தர்கள் தந்ததுதான் தமிழ் மருத்துவம் என்னும் சித்த மருத்துவம்.உணவே மருந்து என்று அறிந்து வைத்திருந்தனர் சித்தர்கள்.அத்துடன் நில்லாமல் எல்லோருக்கும் பயன்படும்படி எழுதியும் வைத்துள்ளனர்.இந்த மூலிகைச் செடிகளுக்காக சித்தர்கள் கொல்லி மலையில் இன்றும் உலாவுவதாக சொல்லுகின்றனர்,கிராமத்து வாசிகள்.

கொல்லிமலை முக்கனிகள் எனப்படும் வாழை,பலா,மா என எல்லாமும் விளைகின்ற இடமாக இருக்கின்றது.அதிலும் இங்கு வளர்கின்ற வாழைப் பழம் மிகவும் சுவைப் பொருந்தியதாக உள்ளது.மழைப் பிரதேசங்களில் காற்றும் நீரும் மிக தூய்மையானது.இந்த நீரிலும்,காற்றிலும் மூலிகைகளின் தன்மையும் சேர்ந்திருக்கின்றன.மலைகளில் பெய்கின்ற மழையானது பற்பல மூலிகைளில் பட்டு ஒன்று சேர்ந்து அருவிகளிலும்,ஊற்றுகளிலும் கலக்கின்றது.இதனால் பல மூலிகைகளின் திறன்களை அது கொண்டுள்ளது.

இது நீரின் சிறப்பென்றால் காற்றுக்கோ அதைவிட சிறப்பு அதிகமாக உள்ளது.மலை உச்சியிலிருக்கும் ஆலயத்தின் மணி ஓசையானது அடிவாரம் வரை அதிர்வுகளை உண்டாக்க கூடியது.இந்த அதிர்வுகள் மனதில் ஒருவித நிம்மதியை கொடுக்கின்றன.அதனால் தான் மலையில் இருக்கும் சுற்றுலா தளங்களுக்கு வரவேற்பு அதிகமானதாக காணப்படுகின்றது.

ஒரு மலையின் சிறப்புகளுக்கும் இன்னொரு மலையின் சிறப்புகளுக்கும் வேறுபாடு காணப்படும்.இதற்கு காரணம் அதன் உயரங்களிளும் அமைப்புகளிலும் காணப்படும் ஏற்ற தாழ்வுகள்.இப்படி பல்வேறு சிறப்புகள் இருப்பதால்தான் நம்முடைய முன்னோர்கள் மலைகளில் ஆலயங்களை அமைத்துள்ளனர்.பக்தியோடு செல்வதானாலும்,இயற்கையை ரசிப்பதற்காக செல்வதானாலும் கொல்லிமலை மிகச் சிறந்த இடம்.


ஒற்றையடிப் பாதை இருபுறமும் செடிகள்



கொல்லி மலை-மாசிக் குன்று



கொல்லி மலையில் இருக்கும் பார்க்க வேண்டிய இடங்கள் பத்து இடங்களை பட்டியலிடுகின்றேன்.கொல்லி மலைக்கு நீங்கள் உல்லாசப் பயணம் செய்வதானால் கீழிருக்கும் எந்த இடங்களையும் மறந்து விடாதீர்கள்.

1.பெரியசாமி கோவில்.
2.அரப்பள்ளீஸ்வரர் கோவில்.
3.ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி.
4.எட்டுக்கை அம்மன்.
5.17 ஆம் நூற்றாண்டு சிவன் கோவில்.
6.வாசலூர்ப்பட்டி படகு சவாரி.
7.ராக்பில்லர் வியூ பாய்ன்ட்.
8.சோழக்காடு தொலைநோக்கு கருவி.
9.2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி.
10.வள்ளல் ஓரியின் சிலை.

வெள்ளாளர்களின் குலதெய்வம்

வெள்ளாளர்களின் குலதெய்வம்

மாசி பெரியண்ணன் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலிகருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் இருக்கும்அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடிஉயரமுள்ள வேங்கைஎன்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன்அமர்ந்திருக்கிறார். கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாகவிளங்குகிறது.

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்புஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனிதஉருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில்காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின்பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்தகுன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இதுபோல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனிதஉருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின்பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்துவருகிறார்.
கல்லாத்துக் கோம்பு

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்தகாமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்குசென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும்செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன்இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில்தங்கிவிட்டார்.
கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பதுபோல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையைசிலர் எட்டுக்கை அம்மன் என்றும் சிலர் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம்கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும்கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.

இக்கோயிலுக்கு மேற்கில் "கொல்லிப்பாவை" என்னும் தெய்விகச் சக்தி வாய்ந்த பதுமை ஒன்று இருந்ததாகச் சொல்லப்படுகிறது. சிந்தாமணி, குறுந்தொகை, சிலப்பதிகாரம், நற்றிணை மற்றும் புறநானூறு ஆகியவை வாயிலாக இப்பாவையின் சிறப்புக்களை அறிகிறோம்.

இப்பாவைப் பற்றிய ஒரு செய்தி வருமாறு ;- இம்மலைப் பகுதியில் தவஞ் செய்த முனிவர்கள், தங்கள் தவத்திற்கு இடையூறு நேராதவாறு காத்துக் கொள்ள கொல்லிப்பாவையை அமைத்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்பாவை பெண் உருவமுடையது. உடல் உறுப்புகள் அசையும் தன்மையன. அரக்கர்களின் வாடை பட்டதும் இப்பாவை பெருஞ்சிரிப்பு செய்து, அவர்களை இழுத்துக் கொன்றுவிடுமாம். காற்று மழை முதலிய இயற்கைச் சீற்றங்களால் இப்பாவை எந்த பாதிப்பும் அடையாது என்பது வரலாறு.

இக் கொல்லிப் பாவையால் இம்மலை காக்கப்படுவதால் இது கொல்லிமலை எனப் பெயர் பெற்றதென்பர். கொல்லிப் பாவையை இம்மலை வாழ் மக்கள் "எட்டுக்கை அம்மன்" என்று கூறுகின்றனர்.

கொல்லி எனப்படும் வானலாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு.
திருநாவுக்கரசு சுவாமிகள்

கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்
புல்லி யார்புர மூன்றெரி செய்தவன்
நெல்லி யானிலை யானநெய்த் தானனைச்
சொல்லி மெய்தொழு வார்சுடர் வாணரே.


வேண்டுதல்கள்

* பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டிபெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
* தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில்குத்துகின்றனர்.
* உயிருடன் ஆடு,மாடு,கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
* ஆடு,மாடு,பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
* படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
* கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும்செய்கிறார்கள்.
* மணிகளை கட்டுதல்,குழந்தை வரம் வேண்டி தொட்டில்கட்டுதல்,வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

செல்லும் வழி

நாமக்கலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில்சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடக்க செல்ல வேண்டும். அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்லவேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும்வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.

சோழிய வெளாளர்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட சமூகங்களுள் தொன்மை வாய்ந்ததுபிள்ளைமார் சமூகம். 'பிள்ளை' என்ற குலப்பட்டம் பூண்டுள்ள இவர்கள் பாண்டியவேளாளர், நாஞ்சில் நாட்டு வேளாளர், நாமதாரி பிள்ளைமார், நாங்குடிவேளாளர்கள், கோட்டை வேளாளர், நீர்பூசி வேளாளர், கார்காத்த (அல்லது) காரைக்கட்டு வேளாளர், அரும்பு கோத்த வேளாளர், சோழிய வெளாளர், அகமுடைய வேளாளர் என்று பலவாறாக வழங்கி வருகிறார்கள்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டில், சோழர்கள் ஆட்சியதிகாரத்தை இழந்துவிட்ட சூழலில், சித்திரை மேழி பெரிய நாட்டார் அமைப்பும் கலைக்கப்பட்டுவிட்டது எனத்தெரிகின்றது. கைக்கோளர், அகம்படி முதலியார் போன்ற சாதிகள் சித்திரை மேழிபெரிய நாட்டார் அணியில் சேராமல் தங்களை வேளாளர் எனஅழைக்கப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டனர். உடையார், நயினார், மூப்பனார் ஆகிய சாதிகள் சித்திரை மேழி பெரிய நாட்டார் என்ற அமைப்பிலிருந்துதங்களை விடுத்தபின், பார்கவ குல சத்திரியர் என அழைத்துக் கொண்டனர். பண்டைய அகம்படி சாதிகளில் சோழிய வேளாளர், கார்காத்த வேளாளர், இசைவேளாளர், வீரக்கொடியார் ஆகிய சாதிகள் மட்டுமே வேளாளர் சமூகத்தில் இடம்பெற்று விட்டனர். இவர்களையே உயர்குடி வேளாளராக நச்சினார்க்கினியர்குறிப்பிடுகின்றார்.

சோழனின் கிளைகுடியினனான தொண்டைமானைத் தங்கள் இனமாகக்கொள்ளும் சோழிய வேளாளர், சோழனின் கிளைக்குடி என்பது உறுதிபடுகின்றது.

வட இந்தியாவில் யது குலத்தின் கிளைக்குடியாகக் கூறப்படும் ஐந்துபிரிவுகளைக் கொண்ட தாளஜங்கா மரபினரை ஒத்தவராவர் இவர். அக்குலத்தோன்றலான ஏயர் கோமான் கலிக்காம நாயனார் வம்சத்தினரும் இன்று சோழியவேளாளர் சாதியிலேயே சேர்ந்திருக்க வேண்டும். கலிக்காம நாயனார், வேளாளருடன் மண உறவு கொண்டதைப் பெரிய புராணம் மூலம்அறியமுடிகின்றது.

மற்றொரு செய்தியின் படி பூவந்திச்சோழன் காலத்தில் அவன் தனதுகாவலர்களை ஏவி நகரத்தார் மாளிகையின் வெள்ளிக்கதவுகளை கவர்ந்துவரச்செய்து, பின் பார்த்து பரிகசிக்கப் போன போது அம் மக்கள் தங்கள்மாளிகையில் பொன்னால் கதவுகள் பொருத்தப்பட்டிருந்ததைப் பார்த்து பொறாதுஅவர்களின் பால் துரோக எண்ணங்கொண்டு துன்புறுத்தினானாம்.ஆத்மநாதசாஸ்திரிகள் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களைப் பரிபாலனம் செய்துவர, இவர்களின் குருவாக ஈசான்ய சிவாச்சாரியார் அவர்கள்இருந்தார்கள்.கலியுகம் 3784ல் பூவந்திச்சோழன் காலமாக ராஜபூஷணச்சோழன்முடிசூட வேண்டிய காலம்.முடிசூட்டும் மகுட வைசியர்கள் மனையாள் இல்லாததனியர்கள். ஆகவே இவர்களுக்கு மணம் முடிக்க எண்ணி சகலஅறநூல்களையும் நன்கு ஆராய்ந்து வேளாள குலப் பெண்களை மணம் முடித்துவைப்பது தகுதி என்று முடிவு செய்து கார்காத்த வேளாளர்,சோழியவேளாளர்,காணியாள வேளாளர் பெண்களை நகரத்தார் இளைஞர்களுக்குமணமுடித்து பின் மன்னனுக்கு முடிசூடினார்களாம்.பழம் பகை மறந்து அரசன்நகரத்தார் மக்களிடம் அன்பும்,ஆதரவும்,சகல மரியாதையும் தந்துகௌரவித்தாராம்.

“பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசு அயலிலிருந்த அதன் சகோதர அரசுகளானசேர, பாண்டிய அரசுகளை வெற்றிகொண்டு சென்னையின் சுற்றுப்புறத்திலிருந்துகுமரி முனை வரை மேலாட்சி செலுத்தியது. அந்தக் காலப்பகுதிக்குப் பின்னர்தென்னிந்தியாவின் தமிழ் முகம்மதியர்கள் ‘சோழிய முகம்மதியர்கள்’ என்றுஅறியப்பட்டனர்@ அல்லது பொதுவாக ‘சோழியர்’ (சோழதேசம் என்றுஅழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் மக்கள்) என அறியப்பட்டதில் சந்தேகமில்லை. இன்றுவரை ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் தென்பாகத்தைச் சேர்ந்த தம்மதத்தினை ‘சோழிய’ என்றே அழைக்கின்றார். ஏனெனில், சோழியர்களில் மிகப்பெரும்பான்மையோர் மதத்தைத் தவிர, மொழி, பொதுத் தோற்றம், சமூகவழக்கங்கள் என்பனவற்றைப் பொறுத்த வரையில் தமிழர்களாக இருக்கின்றனர்”


சோழியர் எனும் சொல்லானது “சோழதேசம்” என அழைக்கப்பட்ட தமிழ் நாட்டின்மக்களைக் குறிக்கின்றது. வின்ஸ்லோ என்பவர் தமது தமிழ் ஆங்கிலஅகராதியில் பின்வருமாறு விளக்கம் தருகிறார். சோழியர் – சோழம் எனும்அவர்களது தேசப் பெயரால் வழங்கப்பட்ட, எத்தனையோ குலங்களிருந்து ஆனஒரு வகுப்பினர். பிராமணர், வேளாளர் முதலியவரிலொரு பிரிவார் சோழியப்பார்ப்பார் சோழிய வேளாளர்........ “சோழியப் பிராமணரும் சோழிய வேளாளரும்போல் சோழிய முகம்மதியர்களும் உள்ளனர். எல்லோரும் சோழ தேசத்தைச்சேர்ந்தவர்கள். ஹிந்துஸ்தானி முகம்மதியர் ஒருவர் அவரது தென்பகுதி மதத்தோழர் ஒருவரைச் “சோழிய” என்று அழைப்பதற்குக் காரணம், அவர் சோழதேசத்தைச் சேர்ந்தவர் என்பதனாலாகும். ஒரு காலத்தில் தென்னிந்தியா அந்தப்பெயரைக் கொண்டே அழைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டில்தென்னிந்தியாவிலிருந்து இலங்கைமீது படையெடுத்து வந்த தமிழர்கள், முன்னர்காட்டியதுபோல் சோழியர் என்றே அழைக்கப்பட்டனர்.


'சோழிய வெள்ளாளர்' போன்று பிள்ளை உட்பிரிவினை ஒத்த, ஆனால் சிறிதுவேறுபட்ட 'சோழியர் இல்லம்' என்ற பிரிவு 'இல்லத்துப்பிள்ளைமார்' பிரிவின் ஓர்அங்கமாக உள்ளது.

சோழ மண்டலத்தில், குறிப்பாகத் தஞ்சாவூர்-நாகப்பட்டினம் பகுதிகளில் பெரும்எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்ற சோழிய வேளாளர்கள், ஈழவர் சமூகப்பிரிவினரே ஆவர். கொங்கு நாட்டுப் பேரூர்ச் சிறுகுடி வேளாளர் மடத்தில் உள்ளகி.பி. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த செப்பேடு, பஞ்ச நாட்டார், செஞ்ச நாட்டார், ஆரணத்தோர், மருமூட்டில்லம், சோழியர் என்ற ஐந்து பிரிவைச்சேர்ந்தோர்களைச் சிறுகுடி வேளாளர்கள் என்று குறிப்பிடுகின்றது. இவற்றில்இறுதி இரண்டு பிரிவுகள் கேரள மாநிலத்து ஈழவர் சமூகத்தில் இதே பெயர்களில்உள்ளன. எனவே சோழிய வேளாளர் எனப்படுவோர் தஞ்சை சோழர்களுக்கும்கொங்குச் சோழர்களுக்கும் தொடர்புடைய வேளாள சமூகப்பிரிவினர் என்பதில்ஐயமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் இல்லத்துப்பிள்ளைமார் எனும் ஈழவர்சமூகத்திலும் பளிங்கில்லம், மஞ்சநாட்டு இல்லம், தோரணத்தில்லம், மூட்டில்லம், சோழிய இல்லம் எனும் உட்பிரிவுகள் இருக்கின்றன என்பது இங்கேகுறிப்பிடத்தக்கது.

சோழப் பேரரசர் முடிசூடும் தலமாகவும் குலத் தெய்வ திருத்தலமாகவும்சிதம்பரம் இருந்ததைப் போன்று கொங்கு சோழ அரசர்களுக்குக் கோநகராகவும்முடிசூடும் தலமாகவும் விளங்கியது பேரூர் ஆகும்.இதிலிருந்தே கொங்குச்சோழர்களின் அரசகுலப் படையாகிய எழுநூற்றுவர்க்கும், சோழியர் பிரிவைச்சேர்ந்த சிறுகுடி வேளாளர்க்கும் உள்ள தொடர்புகளைஉய்த்துணரலாம்.மேற்குறிப்பிட்ட சிறுகுடி வேளாளர் மடத்துச் செப்பேட்டில்சிறுகுடி வேளாளர்களின் குல வரலாற்றைக் குறிப்பிடுகையில் "ஈழம்திறைகொண்ட இலங்காபுரிக் காவலன்" என்றும், " தாசப்படை வெட்டி இரட்டைச்சங்கு பிடித்தவன்" என்றும், "செட்டி தோள் மீது ஏறும் காட்டாரிராயன்" என்றும், "மதுரையை ஆளும் பாண்டியன், சேர அரசன், சோழனுக்கு வாள் தொழில்பயிற்றுவோன்" என்றும் குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.

கொல்லி மலை

கொல்லி மலை, இந்தியாவின் தெற்கு பகுதியில் உள்ள தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடராகும். 1000 முதல் 1300 மீ உயரம் உள்ள இம்மலைத்தொடர்ச்சி, 280 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், கொல்லி மலை இன்றும் இயற்கை அழகுடனே விளங்குகிறது.
பொருளடக்கம்

* 1 பெயர்க் காரணம்
* 2 வரலாற்றுக் குறிப்புகள்
o 2.1 சங்ககாலத்தில் கொல்லிமலை
+ 2.1.1 கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்
# 2.1.1.1 பெருஞ்சேரல் இரும்பொறை
# 2.1.1.2 பொறையன்
# 2.1.1.3 சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
# 2.1.1.4 வானவன்
# 2.1.1.5 அதியமான்
# 2.1.1.6 ஓரி
+ 2.1.2 கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்
* 3 கொல்லிப்பாவை
* 4 சுற்றுலாத் தலங்கள்
o 4.1 ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி
o 4.2 கொல்லிப் பாவைக் கோவில்
o 4.3 அறப்பளீஸ்வரர் கோவில்
o 4.4 முருகன் கோவில்
+ 4.4.1 படகு சவாரி
+ 4.4.2 வியூ பாயிண்ட்
o 4.5 வல்வில் ஓரி பண்டிகை
* 5 போக்குவரத்து
* 6 இவற்றையும் பார்க்கவும்

பெயர்க் காரணம்
கொல்லி மலை & கீழுள்ள சமவெளி


உயிரினங்களைக் கொல்லும் சூர் வாழ்ந்ததால் இம்மலைக்குக் 'கொல்லி' என்னும் பெயர் அமைந்தது. இம்மலைக் காடுகளின் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது.

கொல்லி மலையின் ஒரு பகுதி
வரலாற்றுக் குறிப்புகள்

பழந்தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, ஐங்குறுநூறு முதலியவற்றில் கொல்லி மலையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுமார் கிபி 200-ல், இந்தப் பகுதியை கடையெழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி ஆண்டு வந்தான். ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான் மற்றும் காட்டுப் பன்றியைக் கொன்றதாக வல்வில் ஓரியின் திறனைப் புகழ்ந்து பல பாடல்கள் உள்ளன.

இராமாயணத்தில் சுக்ரீவன் ஆண்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் இதுவாக இருக்கக் கூடும் என்றும் சில கருத்துக்கள் நிலவுகின்றன.
சங்ககாலத்தில் கொல்லிமலை

அரிசில் கிழார், இளங்கீரனார், ஔவையார், கல்லாடனார், குறுங்கோழியூர் கிழார், தாயங்கண்ணனார், பரணர், பெருங்குன்றூர் கிழார், பெருஞ்சித்திரனார், மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் ஆகிய புலவர்கள் கொல்லிமலையைப் பற்றிப் பாடியுள்ளனர்.

கொல்லிமலைப் பகுதியை ஆண்ட அரசர்கள்
பெருஞ்சேரல் இரும்பொறை

பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் கொல்லிப்பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்

- பதிற்றுப்பத்து அரிசில் கிழார் 73,

பொறையன்

கொல்லிமலை நாட்டு அரசன் பொறையன்.

- இளங்கீரனார் – நற்றிணை 346

வேல்படை கொண்ட பசும்பூண் பொறையன் இதன் அரசன்

- ஔவையார் – அகம் 303

பொறையன் இதன் அரசன்

– நற்றிணை 185

சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

சேரமான் யானைக்கட் சேய் தாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லியோர் அடுபொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.

- குறுங்கோழியூர் கிழார் - புறம் 22

[தொகு] வானவன்

வெல்போர் வானவன் இதன் அரசன்

- தாயங்கண்ணனார் – அகம் 213

இவன் அதனைப் போரிட்டு வென்றான்

- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33

அதியமான்

கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்னும் ஊர்ப்பகுதியில் இவனை அதிகமானும் இருபெரு வேந்தரும் இணைந்து தாக்கியபோது பெருஞ்சேரல் இரும்பொறை வென்றான்

– பதிற்றுப்பத்து 8ஆம் பத்து பதிகம்
ஓரி

‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’

- பெருஞ்சித்திரனார் – புறம் 158

வல்வில் ஓரியும் கொல்லிப் பொருநன் என்று குறிப்பிடப்படுகிறான்.

- வன்பரனர் புறம் 152

வல்வில் ஓரி கொல்லிமலை அரசன்

- கபிலர் – குறுந்தொகை 100,
பரணர் - அகம் 208

புகழ்மிக்க ஓரியைக் கொன்று முள்ளூர் மன்னன் காரி கொல்லிமலை நாட்டைச் சேரலர்க்குக் கொடுத்தானாம்.

- கல்லாடனார் – அகம் 209

* கொல்லிப்பாவை பார்க்க.
* ஒப்புநோக்குக ஆய் பொதியமலைச் சூர்மகள் – பரணர் அகம் 198

கொல்லிமலையின் அழகும் ஒப்புமையும்

காந்தள் போல் கூந்தல் மணம்

கொல்லியில் பூக்கும் கார்மலர் (கார்த்திகை எனப்படும் காந்தள் பூ) போலத் தலைவியின் கூந்தல் மணந்ததாம்.

- பரணர் - அகம் 208

யானை

கொல்லிமலைப் பூக்களுக்கு இடையே பிடி(பெண்யானை) மறந்திருப்பது போல இளஞ்சேரல் இரும்பொறையின் பட்டத்தரசி மகளிர் ஆயத்தாரிடையே மறைந்திருந்தாளாம்.

- பெருங்குன்றூர் கிழார் – பதிற்றுப்பத்து 81

மூங்கில்

தலைவியின் தோள் கொல்லிமலை மூங்கில் போன்றதாம்

- தாயங்கண்ணனார் – அகம் 213,
- மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் – அகம் 33

சூர்மகள்

சூர் மகள் விரும்பும் கொல்லிமலையின் உச்சியிலிருந்து கொட்டும் அருவியின் ஓசை போல அலர் ஊரில் பரவியது.

- ஔவையார் – அகம் 303

கொல்லிப்பாவை மடப்பத்தன்மை

கொல்லிப்பாவை போல் தலைவி மடப்பத்தன்மை உடையவளாக விளங்கினாளாம்

- கபிலர் – குறுந்தொகை 100\882,

‘கடவுள் எழுதிய பாவை’ (கடவுள் உருவம் எழுதிய ஓவியம்) போல் தலைவி மடப்பத்தன்மை கொண்டவளாம்.

- பரணர் – அகம் 22\1524,

கொல்லிப்பாவை

முதன்மைக் கட்டுரை: கொல்லிப்பாவை

முனிவர்கள் தங்கள் தவத்தினை அமைதியான இடத்தில் செய்ய விரும்பி கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்ததாகவும், அவர்களின் தவத்தைக் கலைக்க நினைத்த தீய சக்திகளிடமிருந்து தங்களை காக்குமாறு கொல்லிப் பாவையிடம் வேண்டியதாகவும் கதைகள் உள்ளன. அதற்கிணங்கி கொல்லிப் பாவை தனது வசியப் புன்னகையால் தீய சக்திகளை விரட்டியதாகவும் கூறுகின்றனர். கொல்லி மலையில், கொல்லிப் பாவைக்கு இன்றும் ஒரு கோவில் உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
ஆகாச கங்கை நீர் வீழ்ச்சி


கொல்லி மலையில் அறப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாய கங்கை அருவி அய்யாறு ஆற்றின் மீது உள்ளது. 600 அடி உயரமுடைய இந்நீர் வீழ்ச்சியில் குளித்தால் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப் படுகிறது.
ஆகாயகங்கை அருவி
கொல்லிப் பாவைக் கோவில்

கொல்லி மலையில் கொல்லிப் பாவைக்கு ஒரு கோவில் உள்ளது.
அறப்பளீஸ்வரர் கோவில்

சதுரகிரி எனும் மலை உச்சியில் அறப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலைப் பற்றி அப்பர் பாடியுள்ளார். இங்குள்ள ஈசன் 'அறப்பளி மகாதேவன்', 'அறப்பளி உடையார்' என்ற பெயர்களாளும் அழைக்கப்படுகிறார்.
அறப்பளீஸ்வரர் கோவில்

12ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் அய்யாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள அறப்பளீஸ்வரர் அய்யாற்றிலுள்ள சிறிய மீனின் மீது குடி கொண்டிருப்பதாக நம்பப்படுவதால் இக்கோயில் ' மீன் கோயில் ' என்றும் அழைக்கப்படுகிறது.
முருகன் கோவில்

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்களில் பாடப்பெற்ற பழமை வாய்ந்த முருகன் கோவில் கொல்லி மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் முருகர் வேடர் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சிவன், பார்வதி, விஷ்ணு, இடும்பன் மற்றும் விநாயகருக்கும் இங்கு ஆலயங்கள் உள்ளன.


படகு சவாரி

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைத்திருக்கும் வாசலூர்பட்டி படகுத் துறை பார்க்கவேண்டிய இடமாகும்
வாசலூர்பட்டி படகுத் துறை
வியூ பாயிண்ட்

இந்த இடம் ஊட்டி தொட்டபெட்டா அளவிற்கு இல்லையெனினும் பார்க்க வேண்டிய இடமாகும்
வல்வில் ஓரி பண்டிகை

வருடம் தோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள் வல்வில் ஓரியின் நினைவாக ஒரு பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போக்குவரத்து

நாமக்கல் நகரில் இருந்து 55 கிமீ தொலைவில் கொல்லிமலை அமைந்துள்ளது. கொல்லிமலைக்கு நாமக்கல், சேந்தமங்கலம், இராசிபுரம் மற்றும் சேலம் நகர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது. மலைப்பாதையின் தூரம் 26 கிமீ. இம்மலைப்பாதையில் 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வரை மட்டுமே பெரிய பேருந்துகளும் பெரிய வண்டிகளும் செல்ல முடியும். சில கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் அபாயமான வளைவுகளை கொண்டிருப்பதால் தேர்ந்த ஓட்டுனர்களே பேருந்துகளையும் சுமையுந்துகளையும் ஓட்டிச்செல்வர். கார் & வேன்களில் சுற்றுலா செல்வோரும் மலைப்பாதையில் கவனமாக செல்வது நன்று.

2 அல்லது 3 கொண்டை ஊசி வளைவுகளுடன் அபாயமற்ற மாற்று மலைப்பாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்

* [1]
* [2]
* நாமக்கல் மாவட்ட சுற்றுலா தளம்
* கொல்லிமலையில் திணை அரிசி

பா • உ • தொ
நாமக்கல் மாவட்டம்
மாவட்ட தலைமையகம்
நாமக்கல்
மாநிலம்
தமிழ்நாடு
வட்டம்
நாமக்கல் வட்டம் • திருச்செங்கோடு வட்டம் • இராசிபுரம் வட்டம் • பரமத்தி-வேலூர் வட்டம் •
நகராட்சி
நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பள்ளிபாளையம் • குமாரபாளையம்
ஊராட்சி ஒன்றியம்
நாமக்கல் • திருச்செங்கோடு • இராசிபுரம் • பரமத்தி • எலச்சிப்பாளையம் • கபிலர்மலை•மல்லசமுத்திரம் • நாமகிரிப்பேட்டை • பள்ளிபாளையம் • புது சத்திரம் • சேந்தமங்கலம் • வெண்ணந்தூர் • எருமைப்பட்டி • கொல்லிமலை • மோகனூர்
பேரூராட்சிகள்
போத்தனூர் • படைவீடு • எருமைப்பட்டி • காளப்பநாயக்கன்பட்டி • ஆலம்பாளையம் • வெங்கரை • மோகனூர் • நாமகிரிப்பேட்டை • பாண்டமங்கலம் • பட்டிணம்•மல்லசமுத்திரம்• சேந்தமங்கலம்•பிள்ளாநல்லூர் • வெண்ணந்தூர்• இரா.புதுப்பட்டி • சீராப்பள்ளி • வேலூர்(நாமக்கல்) • பரமத்தி • அத்தனூர்

மாசி பெரியண்ணன் கோவில்

மாசி பெரியண்ணன் கோவில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மாசிக்குன்றில் அமைந்துள்ளது. சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. சிறிய கூரைக் கட்டிடத்தின் உள்ளே சுமார் இரண்டடி உயரமுள்ள வேங்கை என்னும் மிருகவாகனத்தின் மீது பெரியண்ணன் அமர்ந்திருக்கிறார். பள்ளர், கொங்கு மற்றும் சோழிய வெள்ளாளர்களின் குலதெய்வமாக விளங்குகிறது.

பொருளடக்கம்

* 1 கொல்லி மலை
* 2 வரலாறு
o 2.1 கல்லாத்துக் கோம்பு
* 3 கொல்லிப் பாவை
* 4 வேண்டுதல்கள்
* 5 கிடைக்கும் பொருட்கள்
* 6 சித்தர்கள்
* 7 செல்லும் வழி
* 8 வெளி இணைப்புகள்

கொல்லி மலை

நாமக்கல் மாவட்டத்தில் பரந்து விரிந்திருக்கின்ற பெரிய மலை கொல்லி மலை. கடல் மட்டத்திலிருந்து 1000 அடிக்கும் மேல் உயரம் கொண்டதாக உள்ளது. எங்கேயும் கிடைக்காத மூலிகைகள் பல இங்கு கிடைக்கின்றன.
வரலாறு

கொல்லிமலை பெரியண்ணன் கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். மாசிக்குன்றில் அமைந்திருக்கிறது.

காசியிலிருந்து பார்வதி தேவியும், சிவனும் தென்திசை நோக்கி வந்தனர். பார்வதி தேவி காமாட்சியாகவும், சிவன் பெரியண்ணனாகவும் மனித உருவெடுத்தனர். துறையூர் அருகேயிருக்கும் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு சென்றார். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நிற்க அது அவரின் பலத்தை தாங்க முடியாமல் ஆடத் தொடங்கியது. அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு சென்றார் பெரியண்ணன். அடுத்த குன்றும் ஆடத் தொடங்கியது. இது போல் ஏழு குன்றுகளில் ஏறி கடைசியாக மாசி குன்றை அடைந்தார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருக்கும் மக்கள் வழிபட்டனர். அவர்களின் பக்தியினால் பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள் செய்து வருகிறார்.
கல்லாத்துக் கோம்பு

இது கொல்லி மலையின் அடிவாரப் பகுதியாகும். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் கொல்லி மலைக்கு சென்றார். காமாட்சியின் தெய்வத் தன்மையால் விலங்குகள் அவரை ஒன்றும் செய்யவில்லை. கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைக்கண்டு மகிழ்ந்த காமாட்சியும் தானும் அங்கு தங்குவதாக கூற, பெரியண்ணன் வேண்டாமெனக் கூறி காமாட்சியுடன் கல்லாத்துக் கோம்பையில் தங்கிவிட்டார்.
கொல்லிப் பாவை

கொல்லிப் பாவை என்பது பெரியண்ணனின் பெண் காவல் தெய்வம். சிவனுக்குக் கால பைரவன் காவல் காப்பது போல பெரியண்ணனுக்கு கொல்லிப் பாவைதான் காவல். கொல்லிப் பாவையை சிலர் எட்டுக்கை அம்மன் என்றும் அழைக்கின்றார்கள். இதன் ஆலயம் கொல்லிமலையின் வேறு பகுதியில் உள்ளது. தற்போது கீரம்பூர் என்னும் கிராமத்திலும் கொங்கு சமூக அன்பர்கள் ஆலையம் அமைத்துள்ளனர்.
[தொகு] வேண்டுதல்கள்

* பல்வேறு வகையான பில்லி சூனியங்களை அகற்ற வேண்டி பெரியண்ணனுக்கு படையல் இடுகின்றனர்.
* தங்களை மோசம் செய்தவர்களை பழிவாங்க உயிருடன் கோழியை வேலில் குத்துகின்றனர்.
* உயிருடன் ஆடு, மாடு, கோழிகளை கோவில்களில் விடுகின்றனர்.
* ஆடு, மாடு, பன்றி என ஒருசேரக் காவு கொடுப்பது முப்பலி என்கின்றனர்.
* படிக் காணிக்கை எனப்படும் வேண்டுதலும் இங்கு பிரபலமாக உள்ளது.
* கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து வேண்டுதல்களும் செய்கிறார்கள்.
* மணிகளை கட்டுதல், குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதல், வேல்களை நடுதல் போன்ற வழக்கங்களும் அதிகமாக உள்ளன.

கிடைக்கும் பொருட்கள்

மூலிகை மலை என்பதால் பல மூலிகைகள் கிடைக்கின்றன. பயன்படுத்தும் முறையையும் தெளிவாக கூறுகின்றனர். முக்கனிகளும் கிடைக்கின்றன. மலை வாழைப்பழம் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள ஆடுகளில் கொழுப்பு குறைவாக இருப்பதாய் கூறுகின்றனர்.
சித்தர்கள்

இங்கு கிடைக்கும் மூலிகைகளுக்காக சித்தர்கள் அடிக்கடி வந்து போகின்றார்கள் என்கின்றனர் சில கிராமத்துவாசிகள். பறந்து விரிந்து கிடக்கின்ற கொல்லிமலையில் சித்தர்கள் குகைகளையும் அவர்கள் வாழ்ந்திருப்பதற்கான அடையாளங்களையும் ஒரு தனியார் தொலைக்காட்சி ஆதாரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
[தொகு] செல்லும் வழி

நாமக்கல்லிலிருந்து அறப்பள்ளீசுவரர் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்று பூந்தோட்டம் என்ற இடத்தில் இறங்கி 4கி.மீ நடந்து செல்ல வேண்டும் அல்லது கிழக்குவளைவு என்னும் இடத்தில் இறங்கி 2கி.மீ நடந்து செல்ல வேண்டும். இந்த வழியில் ஓடையொன்று உள்ளது. அதன்பிறகு இருக்கும் வழுக்குப் பாறையை தாண்டினால் பெரியண்ணசாமி கோவில் வருகிறது.